ஷாப்பிங் ஆஃபர்ஸ்

துபாயில் நாளை தொடங்கும் 12 மணிநேர அதிரடி விற்பனை!! – பிராண்டட் தயாரிப்புகளுக்கு 90% வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

அமீரக குடியிருப்பாளர்கள் வெகுநாள் எதிர்நோக்கிக் காத்திருந்த, தங்களுக்கு மிகவும் பிடித்த பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை வழங்கும் பிரம்மாண்ட 12 மணிநேர அதிரடி விற்பனை நாளை துபாயில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

நூற்றுக்கணக்கான பிராண்டுகள் மற்றும் விற்பனையகங்கள் பங்கேற்கும் இந்த அதிரடி விற்பனை பல மஜித் அல் ஃபுத்தைம் ஷாப்பிங் மால்களில் நாளை வியாழக்கிழமை, ஜூன் 29 ம் தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த அதிரடி தள்ளுபடியானது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேரம் நடைபெறவுள்ளது.

துபாயில் நடக்கவுள்ள இந்த அதிரடி ப்ரோமோஷன் ஆனது, துபாய் சம்மர் சர்ப்ரைஸின் (DSS) ஒரு பகுதி ஆகும். துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெய்ல் எஸ்டாப்லிஷ்மென்ட் (DFRE) நடத்தும் இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS), சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குடியிருப்பாளர்களுக்கு அதிரடி ஷாப்பிங் சலுகைகள், ஏராளமான கச்சேரி நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மிக்க வைக்கும் ராஃபிள்கள் பல ஷாப்பிங் அனுபவங்களை ஜூன் 29 முதல் செப்டம்பர் 3 வரை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது.

குறிப்பாக, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம் மற்றும் சிட்டி சென்டர் அல் ஷிந்தகா ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் நடைபெறும் 12 மணி நேர விற்பனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதிகப் பலன்களைப் பெறலாம் என்று DFRE தெரிவித்துள்ளது.

அதேசமயம், DSS ப்ரோமோஷனில் 300 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள், 1 மில்லியன் SHARE புள்ளிகளை வெல்லும் வாய்ப்பை பெறுவதற்கான டிராவில் நுழையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!