அமீரக செய்திகள்

UAE: வேலையின்மை காப்பீடு திட்டத்தில் தவணையைச் செலுத்தத் தவறினால் 200 திர்ஹம் அபராதம்!! தவணையை செலுத்துவதற்கான வழிமுறைகள் என்ன…??

அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிபவரா நீங்கள்? நீங்கள் வேலையின்மை இன்சூரன்ஸ் திட்டத்தில் குழு சேர்ந்த பின்னர், உங்கள் தவணையை செலுத்தாமல் இருக்கிறீர்களா..??அத்துடன் துபாய் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து (Dubai Insurance Company-DIN) உங்கள் தவணை தாமதமாகிவிட்டதாக SMSஐ பெற்றுள்ளீர்களா..??

அவ்வாறு நீங்கள் வேலையிழப்பு (Involuntary Loss of Employment-ILOE) திட்டத்தில் மாதாந்திர அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு சந்தா விருப்பத்திற்கு குழுசேர்ந்திருந்தால், அபராதமின்றி உங்கள் தவணையை எப்படி செலுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

தவணைகளை செலுத்துவதற்கான வழிகள்:

  1. ILOE இணையதளம்
  2. ILOE ஆப்
  3. ILOE கால் சென்டர்

ILOE இணையதளம் வழியாகத் தவணையைச் செலுத்தும் முறை:

படி 1-ILOE இணையதளத்தில் OTP மூலம் உள்நுழையவும்:

>> https://iloe.ae/ என்ற லிங்க்கை கிளிக் செய்து முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Subscribe Here’ என்ற சிவப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

>> அடுத்து மொபைலில் ஒரு பாப்-அப் நோடிஃபிகேஷன் உங்களுக்குக் கிடைக்கும். அதில் ‘Subscribe Here’ என்பதைக் கிளிக் செய்யவும்.

>> இதனையடுத்து இணையதளம் ILOEயின் login பக்கத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். அங்குள்ள ‘individual’ முதல் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

>> நீங்கள் பணிபுரியும் துறையைத் தேர்ந்தெடுக்கவும்: தனியார், ஃபெடரல், MOHRE இல் பதிவு செய்யப்படாத மண்டலம்.

>> எமிரேட்ஸ் ஐடி எண் அல்லது ஒருங்கிணைந்த எண் (Unified Number) மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘Request OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.

>> இறுதியாக, SMS இல் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு, ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2-தவணைகளை செலுத்துதல்:

  • OTP மூலம் உள்நுழைந்ததும், ILOE இணையதளத்தில் உங்கள் தனிப்பட்ட டாஷ்போர்டுக்கு மாற்றப்படுவீர்கள். அங்கு, உங்களது இன்சூரன்ஸ் நம்பர், பாலிசியின் தொடக்க மற்றும் காலாவதி தேதி, இன்சூரன்ஸ் கேட்டகரி மற்றும் உங்கள் கடைசி தவணை எப்போது செலுத்தப்பட்டது போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.
  • உங்கள் திரையில் வலது புறத்தில், நீங்கள் ஏற்கனவே செலுத்திய பணம் மற்றும் செலுத்த வேண்டிய தவணையின் செலவைக் காணலாம்.
  • அடுத்து, ‘Pay Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதைத் தொடர்ந்து, ஒரு தனி பேமெண்ட் சேனலுக்கு மாற்றப்படுவீர்கள். அதில் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு, ‘Pay’ பட்டனைக் கிளிக் செய்யவும். சில நொடிகளில், மீண்டும் ILOE இணையதளத்திற்குத் திருப்பிவிடப்படுவீர்கள்.
  • அத்துடன் பணம் செலுத்தியது வெற்றியடைந்ததாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ILOE இலிருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

ILOE ஆப் மூலம் தவணையை செலுத்துதல்:

  • உங்கள் மொபைலில் ‘ILOE’ செயலியை டவுன்லோட் செய்து, முதலில் ‘login with an OTP’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, நீங்கள் பணிபுரியும் துறையைத் தேர்ந்தெடுக்கவும் – தனியார், ஃபெடரல், MOHRE இல் பதிவு செய்யப்படாத (இலவச மண்டலம்).
  • உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘Request an OTP’ என்பதைக் கிளிக் செய்தால், SMS மூலம் OTPஐப் பெறுவீர்கள்.
  • நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு, ‘Submit’ என்பதைத் தட்டவும். அதனையடுத்து, உங்களின் தவணை தேதிகள் மற்றும் அடுத்த கட்டணம் செலுத்த வேண்டிய நேரம் போன்ற விவரங்களைக் காண்பிக்கும் டாஷ்போர்டுக்கு மாற்றப்படுவீர்கள்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘Pay Now’ என்ற பட்டனை கிளிக் செய்யவும். உடனடியாக, ஒரு தனி பேமெண்ட் சேனலுக்கு அனுப்பப்படுவீர்கள்.
  • அங்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு, ‘Pay’ பொத்தானைத் தட்டவும்.
  • சில நொடிகளுக்குப் பிறகு, நீங்கள் மீண்டும் ILOE பயன்பாட்டிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள், மேலும் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

ILOE கால் சென்டர் மூலம் தவணையை செலுத்துதல்:

>> ILOEயின் அதிகாரப்பூர்வ கால் சென்டரை 600 599 555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

>> உங்கள் மொழி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் விசாரணைகளுக்கு எண் 1 ஐயும், பணம் செலுத்துவதற்கும் சந்தாவுக்கும் 2ஐ யும் மற்றும் ஏஜென்டுடன் பேச 3ஐயும் அழுத்தவும்.

>> நீங்கள் எண் 3ஐ அழுத்தி, தவணைகளை செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை கால் சென்டர் முகவருக்குத் தெரிவிக்கவும்.

>> உங்களின் எமிரேட்ஸ் ஐடி நம்பர், பெயர் (எமிரேட்ஸ் ஐடியில் உள்ளவாறு) மற்றும் ILOE திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு அவர்கள் கேட்பார்கள்.

>> அதன்பிறகு, தவணையை செலுத்துவதற்கான லிங்க் உடன் ILOE இலிருந்து மின்னஞ்சலைப் பெறுவீர்கள். அதிலுள்ள ‘Pay Now’ பட்டனை கிளிக் செய்ததும், ஒரு தனி பேமெண்ட் சேனலுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

>> அங்கு உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு ‘Pay’ பட்டனைத் தட்டவும்.

>> சில வினாடிகளுக்குப் பிறகு, நீங்கள் ILOE பயன்பாட்டிற்குத் திருப்பிவிடப்படுவீர்கள், மேலும் பணம் செலுத்துதல் வெற்றிகரமாக இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

தவணையை செலுத்தத் தவறினால் என்னவாகும்?

உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான தவணையை செலுத்தத் தவறினாலோ, தாமதித்தாலோ உங்கள் பாலிசி ரத்து செய்யப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதாவது, நீங்கள் உரிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தவணைகளைச் செலுத்தாவிட்டால், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி ரத்து செய்யப்பட்டு, 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!