அமீரக செய்திகள்

“அமீரகத்தின் மிகச்சிறந்த பொருளாதார ஆண்டாக 2023 இருக்கும்”… துபாய் ஆட்சியாளர் ட்வீட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதான ஏற்றுமதியே எண்ணெய் சார்ந்த பொருட்கள்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதையும் மிஞ்சும் புது சாதனையாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம் 2023 இன் ஆண்டின் முதல் பாதியில் 1.239 டிரில்லியனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்த ஏற்றுமதி விகிதமானது சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது 14.4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையொட்டி, 2023 ஆம் ஆண்டிற்கான எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியானது 22 சதவீதம் உயர்ந்து, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் 10 வர்த்தக நாடுகளுடன், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினை கையாளும் அமீரகத்தின் விகிதமானது 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்பொழுது 87.4 % அதிகரித்து அதீத வளர்ச்சியினை எட்டி உள்ளது என ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர், “அமீரகத்தின் வரலாற்றில் 2023 ஆம் நாடானது மிகச்சிறந்த பொருளாதார ஆண்டாக அமையும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அமீரகத்தின், எண்ணெய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சியானது 2020 ஆம் ஆண்டு முதல் மெதுவாக அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தக்க மைல் கல்லினை எட்டி உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஐக்கிய அரபு அமீரகம் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும், உலகின் கிழக்கு பகுதியை மேற்குடன் இணைக்கும் பாலமாக அதன் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீட்டாளர் நட்புக் கொள்கைகள் மற்றும் மற்ற நாடுகளுடன் மேற்கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் (CEPAs) ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மறு ஏற்றுமதி ஒப்பந்தம் கொண்டுள்ள இந்தியா, இந்தோனேஷியா, துருக்கி மற்றும் பல நாடுகள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இந்த வளர்ச்சியானது உலகெங்கிலும் உள்ள முக்கிய சந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவை ஆழப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாகும் என வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் தானி பின் அஹ்மத் அல் சியோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி உலகளாவிய வர்த்தக பங்காளியாக சீனா தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை உள்ளன என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் CEPA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈராக், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஹாங்காங் மற்றும் ரஷ்யா ஆகியவை முதல் 10 இடங்களைப் பூர்த்தி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!