வளைகுடா செய்திகள்

அக்டோபர் 1 முதல் மஸ்கட்-திருவனந்தபுரம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கும் ஓமன் ஏர்.. முன்பதிவு தொடக்கம்..!!

ஓமான் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஓமன் ஏர் நாளை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 162 பேர் பயணிக்கக்கூடிய வகையில் போயிங் 737 விமானம் மூலம் இரண்டு நகரங்களுக்கும் இடையே விமான சேவை வழங்கப்படும் என்றும், இந்த சேவையானது வாழத்தில் நான்கு நாட்கள் அதாவது ஞாயிறு, புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில்  இயங்கும் என்றும் ஓமன் ஏர் தெரிவித்துள்ளது.

விமான நேரங்கள்:

விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த விமானங்கள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட் விமான நிலையத்திற்கு காலை 7.45 மணிக்கு வந்து மீண்டும் 8.45 மணிக்கு புறப்படும்.

அதுபோல, வியாழக்கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு வந்தடைந்து அதன் பிறகு மீண்டும் மாலை 4.10 மணிக்கு புறப்படும் என்றும், சனிக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்து பின்னர் 3.30 மணிக்கு புறப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் திருவனந்தபுரம்-மஸ்கட் வழித்தடத்தில் தினசரி சேவைகளை வழங்குகின்ற நிலையில், ஓமன் ஏர் இரண்டு நகரங்களையும் இணைக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக பயண்பாட்டிற்கு வரவுள்ளது.

திருவனந்தபுரம் மட்டுமல்லாமல், ஓமன் ஏர் அக்டோபர் 1 முதல் லக்னோ-மஸ்கட் வழித்தடத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த புதிய இரண்டு இடங்களுடன் சேர்த்து இந்தியாவின் 10 வெவ்வேறு நகரங்களில் இருந்து ஓமன் ஏர் விமான சேவையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!