ஓமானில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை..!! மீலாது நபியை முன்னிட்டு வெளியான அறிவிப்பு…

இஸ்லாமிய சமூகத்தினர் போற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓமானில் எதிர்வரும் செப்டம்பர் 28 வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் துறையில் உள்ள முதலாளிகள், அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் விடுமுறைக்கு கூடுதல் ஊதியம் வழங்கினால் அந்த நாளில் பணியாளர்களை வேலை செய்ய வைப்பதற்கு அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 28, 2023 க்கு இணையான ரபீ அல் அவல் 1445 ஹிஜ்ரி 12 வியாழன் அன்று, ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அப்பேரட்டஸ் (State’s Administrative Apparatus) மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிற சட்டப் பிரிவுகளின் ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வார விடுமுறை இரண்டு நாட்கள் பெறும் ஊழியர்கள் இதன் முலம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.