அமீரக செய்திகள்

துபாயில் காலி பார்க்கிங் இடத்தை கண்டறிய RTAவின் புதிய ஆப்.. பார்க்கிங் இடத்தை தேடி இனி அலைய தேவையில்லை..!!

துபாயில் பார்க்கிங் இடத்தைத் தேடுவது சிரமமாக உள்ளதா? இதனால் உங்கள் நேரமும் வீணாகிறது என்று கவலை கொள்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ‘துபாய் டிரைவ் (Dubai Drive)’ ஆப் உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த ஆப் மூலம் நீங்கள் செல்லும் இடத்திற்கு அருகில் எத்தனை பார்க்கிங் இடங்கள் காலியாக உள்ளன என்பதை முன்கூட்டியே உங்களால் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இந்த ஸ்மார்ட் ஆப் வழங்கும் ஆன்லைன் சேவையின் மூலம், நீங்கள் மேப்பில் (map) தேர்ந்தெடுக்கும் இடத்தைச் சுற்றி இருக்கும் பார்க்கிங் பகுதிகளின் சரியான எண்ணிக்கையையும் பார்க்கிங் இருப்பிடத்திற்கான கட்டணத்தையும் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்த ஆப் துபாயில் உள்ள அனைத்து பார்க்கிங் பகுதிகளையும் உள்ளடக்காது என RTA தெரிவித்துள்ளது. இருப்பினும், துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலை, துபாய் இன்டர்நெட் சிட்டி, தேரா க்ரீக் ஏரியா மற்றும் எக்ஸ்போ சிட்டி துபாய் போன்ற பிரபலமான சில முக்கிய சுற்றுப்புறங்கள் மற்றும் வணிகம் சார்ந்த மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

துபாய் RTA வின் இந்த புதிய ஆப் மூலம் பார்க்கிங் இடங்களை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி படிப்படியாக இங்கே பார்க்கலாம்.

படி 1: ‘துபாய் டிரைவ்’ ஆப்ஸில் சேவையைக் கண்டறிதல்

  • உங்கள் மொபைலில் RTA ‘Dubai Drive’ அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
  • அதன் பிறகு, பயன்பாட்டைத் திறந்து, முகப்புப் பக்கத்தில் ‘Parking’ என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து, ‘Search for Parking’ என்பதை அழுத்தவும்.

படி 2: மேப்பில் உங்கள் பார்க்கிங் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்

அதைத் தொடர்ந்து, உங்களுக்கு அருகில் இருக்கும் பார்க்கிங் ஸ்பாட்களின் மேப் உங்களுக்குக் காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு பொது பார்க்கிங் அல்லது பல அடுக்கு இடங்களைத் தேர்வுசெய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன.

மேலும், இந்த மேப்பில் குறிப்பிட்ட பகுதிகளில் பின் செய்யப்பட்ட பார்க்கிங் அடையாளங்கள் உள்ளது. இந்த அடையாளம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களில் குறியிடப்பட்டிருக்கும். அதில் பார்க்கிங் இடங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

அத்துடன் அந்த இடத்தை கிளிக் செய்தால், பார்க்கிங் குறியீடு, குறிப்பிட்ட பார்க்கிங் ஸ்பாட்டின் கட்டணம் மற்றும் கிடைக்கும் இடங்களின் சதவீதம் போன்ற விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

படி 3:  பார்க்கிங்கிற்கு பணம் செலுத்துதல்:

ஒருவழியாக, நீங்கள் பார்க்கிங் மண்டலத்திற்கு வந்து பார்க்கிங் செய்தவுடன், துபாய் டிரைவ் ஆப் மூலமாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் ‘Pay’ என்பதை கிளிக் செய்தால் போதும், ஆப்ஸ் தானாகவே உங்கள் இருப்பிடத்தைக் கண்டறியும். மாறாக, தேடல் பட்டியில் பார்க்கிங் குறியீட்டையும் உள்ளிடலாம்.

உங்கள் பார்க்கிங் கணக்கில் போதுமான பேலன்ஸ் இருந்தால் மட்டுமே, ஆப்ஸில் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்த முடியும். அவ்வாறு உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லையெனில், நீங்கள் ‘Top Up’ என்பதைக் கிளிக் செய்து, 10 முதல் 500 திர்ஹம் வரை தேர்ந்தெடுத்து, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

உங்கள் வாகனத்தின் பிளேட் நம்பரை உள்ளிடவும். பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டதும் அதற்கான அறிவிப்பை SMS மூலம் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!