அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் முக்கிய சாலை மூடல்: அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து ஆணையம்…
ஷார்ஜாவின் முக்கிய சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பகுதியளவு சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17) ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அல் மலிஹா சாலையில் ஒரு பகுதியானது வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) மூடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 முதல் அமலுக்கு வரும் இந்த மூடல், அடுத்த மாதம் அக்டோபர் 18, 2023 வரை செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.