அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் முனிசிபாலிட்டி தொடர்பான விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50% தள்ளுபடி.. அறிவிப்பை வெளியிட்ட நிர்வாக கவுன்சில்..!!

ஷார்ஜாவில் முனிசிபாலிட்டி தொடர்பான விதி மீறல்களின் விளைவாக விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக, ஷார்ஜா நிர்வாகக் கவுன்சில் (Sharjah Executive Council) அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தள்ளுபடியானது அடுத்து வரும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் அது கூறியுள்ளது.

ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும் துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகமது பின் சுல்தான் அல் காசிமி அவர்கள் தலைமையில் நேற்று (செப்டம்பர் 5, செவ்வாய்க்கிழமை) காலை ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அரசாங்க வேலைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து நிர்வாகக் கவுன்சில் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன் ஷார்ஜா எமிரேட்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உதவி வழங்குவது தொடர்பான முடிவையும் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த முடிவின்படி, இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு உதவிகளை வழங்க சமூக சேவைகள் துறைக்கு (Department of Social Services) பொருப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை இருப்பு ஆணையத்துடன் (Environment and Natural Reserves Authority) இணைந்த ஷார்ஜாவில் உள்ள நாய் பராமரிப்பு மையத்தை (Dog Care Centre) ஷார்ஜா ஸ்போர்ட்ஸ் கவுன்சிலுடன் இணைப்பதற்கான முடிவையும் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும், நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான ஷேக் அப்துல்லா பின் சலேம் பின் சுல்தான் அல் காசிமி ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான ஷேக் சுல்தான் பின் அகமது பின் சுல்தான் அல் காசிமி ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!