வளைகுடா செய்திகள்

சவுதி அரசின் புதிய சட்டம்.. வெளிநாட்டவர்கள் இனி சொந்த நாட்டவர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்த முடியாது.. குறைந்தபட்ச சம்பள வரம்பு 10,000 ரியால்..!!

சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் வீட்டுப்பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக புதிய விதிமுறை ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி தங்கள் சொந்த நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்று சவூதியின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) கீழ் இயங்கும் வீட்டுப் பணியாளர்கள் சேவைகளுக்கான Musaned தளம் தெரிவித்துள்ளது.

சவூதியின் புதிய ஆட்சேர்ப்பு முறை தொடர்பான விதிமுறைகளின் படி, வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களின் விசாவிற்கு விண்ணப்பிப்பது தடைசெய்யப்பட்டாலும், மற்ற நாட்டவர்களை வீட்டுப் பணியாளர்களாக நியமிக்க அனுமதி உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், வீட்டுப் பணியாளர்களாக சேர்க்க விரும்பும் வெளிநாட்டவர்கள், விசா வாங்குவதற்குத் தேவையான நிபந்தனைகள் மற்றும் நிதித் தேவைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

Musaned இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, முதல் முறையாக ஆட்சேர்ப்பு விசா வாங்குவதற்கு முயற்சிக்கும் வெளிநாட்டு ஊழியர் குறைந்தபட்சம் 10,000 ரியால் மாத சம்பளம் பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 100,000 ரியால் வங்கி இருப்பு இருப்பதற்கான ஆவணத்துடன் பொருளாதார நிலைத்தன்மைக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இரண்டாவது விசா வழங்கலுக்கு, குறைந்தபட்ச சம்பளத் தேவை இரட்டிப்பாகி 20,000 ரியால் ஆகவும், வங்கி இருப்பு 200,000 ரியால் ஆகவும் இருப்பதற்கான ஆதாரத்துடன் வழங்க வேண்டும்.

மேலும், சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவரின் பொருளாதாரத் திறனானது, சமூகக் காப்பீட்டுக்கான பொது அமைப்பு (General Organization for Social Insurance (GOSI) வழங்கிய சான்றிதழுடன் சரிபார்க்கப்பட வேண்டும், இது மாத ஊதியத்தின் அறிக்கைக்கும் பொருந்தும். அதுமட்டுமில்லாமல், இந்த சான்றிதழை விசா விண்ணப்ப தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!