அமீரக செய்திகள்

அபுதாபியில் அமையவிருக்கும் ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனாமஸ் வாகன மையம்.. 50,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்ப்பு!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக சுயமாக இயங்கும் ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனாமஸ் வாகனங்களை உருவாக்குவதற்கென பிரத்யேகமான ஒருங்கிணைந்த இடத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அபுதாபி நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள உலகின் முன்னணி ஸ்மார்ட் & ஆட்டோனாமஸ் வாகனத் தொழில்களின் (Smart & Autonomous Vehicle Industries -SAVI) ஒருங்கிணைந்த தொகுதியை அபுதாபியில் நிறுவுவதன் மூலம் வேலைவாயப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ஒன்றிணைந்த தொகுதி பயண்பாட்டிற்கு வருகையில் ஏறத்தாழ 30,000 முதல் 50,000 வரையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 90 பில்லியன் திர்ஹம் முதல் 120 பில்லியன் திர்ஹம்ஸ் வரை பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும், அபுதாபி பட்டத்து இளவரசர் மற்றும் அமீரகத்தின் துணைப்பிரதமரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் முன்னிலையில், அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறையின் தலைவரான அஹ்மத் ஜசெம் அல் ஜாபி இந்த திட்டம் குறித்து விளக்கியுள்ளார்.

அத்துடன் நிலம், ஆகாயம் மற்றும் கடல் வழியாக சுயமாக இயங்கும் ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனமாஸ் வாகனங்களின் வளர்ச்சியை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான மல்டி மாடல் கிளஸ்டரை நிறுவுவதற்கான திட்டங்களையும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் மதிப்பாய்வு செய்துள்ளார்.

அபுதாபியில் அமையவுள்ள இந்த ஸ்மார்ட் & ஆட்டோனாமஸ் வாகனத் தொழில்களின் (Smart & Autonomous Vehicle Industries -SAVI) ஒருங்கிணைந்த தொகுதியானது, அபுதாபியை  ஸ்மார்ட் மற்றும் தன்னாட்சி வாகனங்களின் வளர்ச்சிக்கான ஒரு உலகளாவிய மையமாக உயர்த்தும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!