அமீரக செய்திகள்

UAE: உணவகங்களில் கேஸ் அமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய ஆய்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அபுதாபி..!!

அபுதாபியில் உள்ள உணவகங்களில் எரிவாயு அமைப்புகள் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் ஆய்வுப் பிரச்சாரம் அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் மற்றும் அபுதாபி எரிவாயு பாதுகாப்புக் கமிட்டி (Abu Dhabi Gas Safety Committee) தொடங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள உணவகங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பீடு செய்வது மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதைக் கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க குழு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்தப் பிரச்சாரத்தில் உணவகங்களில் எரிவாயு அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்து இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற தொடர் நடவடிக்கைகளைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான தனது ஒத்துழைப்பையும் கமிட்டி குறியிட்டுக் காட்டியுள்ளது.

மேலும், உணவு நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களில் கேஸ் அமைப்புகளுக்கான பாதுகாப்பு தரங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒர்க் ஷாப் நடத்தி தேவையான தரங்களுக்கு இணங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உணவு நிறுவனங்களுக்குள் எரிவாயு மற்றும் தீ கண்டறிதல் அமைப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆய்வுக்குழு எரிவாயு அமைப்புகளை சோதனை செய்த பின்னர், அதன் நிலை குறித்த விரிவான அறிக்கையை வெளியிடும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு நிறுவனங்களின் பட்டியலை உணவக உரிமையாளருக்கு வழங்கும். ஆகையால், உரிமையாளர் அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்தவுடன், ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் இணக்கச் சான்றிதழைப் பெறுவதற்கு மறுஆய்வுக்கு வருமாறு கோரலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சான்றிதழ் ஆண்டு அடிப்படையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யவில்லை என்றால், அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை உணவகங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் எரிவாயு அமைப்பு மற்றும் அதன் விநியோகங்களை நிறுவுவதை உறுதி செய்வது, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்துடன் வழக்கமான பராமரிப்பு ஒப்பந்தத்தை பராமரிப்பது மற்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் சரியான உயரத்தில் உணவகங்களில் எரிவாயு உணர் கருவிகளை (gas detectors) நிறுவுவது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் இதுபோன்ற எரிவாயு தொடர்பான மீறல்களை ஏதேனும் உணவு நிறுவனங்களில் கண்டறிந்தால், 800555 என்ற எண்ணில் அபுதாபி அரசு தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!