வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் சாலையைக் கடந்து சென்ற முதலை..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் முதலை ஒன்று சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் கதீஃப் என்ற இடத்தில் இருக்கும் சாலையில் கார்கள் நடுவே முதலை ஊர்ந்து சென்றுள்ளது. இந்த முதலையானது, மிருக காட்சி சாலையில் இருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

அந்த முதலை சாலையின் விளிம்பில் இருந்து மறுபுறம் செல்ல முயன்றதால், வாகன ஓட்டிகள் அதன் மீது மோதாமல் இருக்கக் கவனமாக வாகனத்தை ஓட்டியுள்ளனர். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதலை அடையாளம் தெரியாத நபரால் கயிற்றால் இழுக்கப்படுவதைக் காணலாம்.

மேலும், வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியாததால், சவுதி அதிகாரிகள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சவுதி அரேபியாவில், இதுபோன்ற அழிந்து வரும் விலங்குகளை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது மற்றும் அவற்றைக் கையாள்வது போன்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 30 மில்லியன் ரியால் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!