பண்டிகை நாட்களை முன்னிட்டு 4.4 மில்லியன் பயணிகளை கையாளவுள்ள துபாய் ஏர்போர்ட்.. பயணிகளுக்கான வழிமுறைகள் வெளியீடு..!!
இனி வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக 4.4 மில்லியன் பயணிகள் கடந்து செல்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விமான நிலையத்தில் சராசரி தினசரி போக்குவரத்து சுமார் 258,000 ஐ எட்டும் என்றும், குறிப்பாக டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை அன்று உச்சமாக 279,000 பயணிகளை எட்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் பண்டிகைக்கால நெரிசலைத் தவிர்க்க DXB பின்வரும் சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது:
- பொதுவாக, பண்டிகை விடுமுறை மற்றும் உச்ச நேரங்களில் DXB இல் மெட்ரோ இயக்க நேரம் நீட்டிக்கப்படும். எனவே, விமான நிலையத்தின் டெர்மினல்கள் 1 மற்றும் 3 க்கு செல்லும் பயணிகள் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும்.
- எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகள், ஆரம்ப மற்றும் சுய-சேவை செக்-இன் வசதிகள் மற்றும் துபாயில் உள்ள DIFC பகுதியில் உள்ள ICD புரூக்ஃபீல்ட் பிளேஸில் சிட்டி செக்-இன் விருப்பத்தையும் அஜ்மானில் உள்ள பிரத்யேக வசதியையும் பயன்படுத்தவும்.
- அதேபோல், flydubai பயணிகள் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
- மற்ற விமான நிறுவனங்களுடன் பயணம் செய்யும் பயணிகள் புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக DXB-க்கு வர வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த ஆன்லைனில் செக்-இன் செய்யவும்.
- 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்த ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தலாம்.
- நீங்கள் பயணிக்கும் இடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையான அனைத்து பயண ஆவணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.
- விமான நிறுவனங்களின் ஆலோசனைகளின் படி, பொருட்களை எடை போட்டு, பாதுகாப்புச் சோதனைகளுக்குத் தயாராக இருங்கள்.
- நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜ்களில் உதிரி பேட்டரிகள் மற்றும் பவர் பேங்க்களை சரியாக பேக் செய்யவும்.
- போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில் டெர்மினல்களுக்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் வீட்டிலேயே நெருக்காமனவர்களிடம் இருந்து விடைபெறுங்கள்.
- இந்த கால கட்டத்தில் நெரிசலை அனுபவிக்கலாம் என்பதால், உங்களால் முடிந்த வரை டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3க்கு செல்லும் விமான நிலைய சாலையை தவிர்க்கவும்.
- டெர்மினல்கள் 1 மற்றும் 3 ஆகிய இரண்டிலும் உள்ள வருகையாளர்களின் முன்பகுதிகளுக்கான அணுகல் பொது போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே. எனவே, விருந்தினர்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வருபவர்கள் DXBயின் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.
விமான நிலைய அனுபவம்:
பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்ததும், அங்குள்ள உணவகங்கள், டூட்டி ஃப்ரீ ஷாப்பிங், ஹோட்டல் மற்றும் பிரத்யேக லவுஞ்ச் அணுகல் உள்ளிட்ட DXB வசதிகளை விமானத்திற்கு முன் அனுபவிக்கலாம்.
துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் ஆபரேஷன்ஸின் மூத்த துணைத் தலைவர் எஸ்ஸா அல் ஷம்சி கூறுகையில், விடுமுறை உற்சாகம் முழு வீச்சில் இருப்பதால், இந்த பயண நாட்களுக்கு தாங்கள் தயாராகிவிட்டதாகவும், DXB முழுவதிலும் உள்ள அர்ப்பணிப்புள்ள குழுக்கள் பண்டிகை பயண அனுபவத்தை மகிழ்ச்சியாகவும், பிரகாசமாகவும் மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel