அமீரக செய்திகள்

அமீரகத்தில் வசிப்பவர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்ட உங்களுக்கான 7 வழிகள்.. பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளிட்ட விபரங்கள் இங்கே..!!

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் வருமானத்தை ஈட்ட விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? அமீரகத்தில் உங்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் தொழில்முறை திறன்களைப் பொறுத்து, உங்கள் வருமானத்தை நீங்கள் கூடுதலாகப் பெற பல்வேறு வழிகள் உள்ளன.

அவ்வாறு கூடுதல் வருமானத்திற்காக நீங்கள் வணிகம் அல்லது வேலையில் ஈடுபடும் போதெல்லாம், நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். உதாரணமாக, நீங்கள் கூடுதல் வருமானத்திற்காக ஃப்ரீலான்சிங் வேலை செய்ய வேண்டும் என்றால், நாட்டில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய உங்களிடம் ஃப்ரீலான்ஸ் அனுமதி இருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் சட்டப்பூர்வமாக கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்கான ஏழு எளிய வழிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. நீங்கள் விடுமுறையில் இருக்கும்போது உங்கள் குடியிருப்பை வாடகைக்கு விடுதல்:

ஹாலிடே ஹோம்ஸ் நீங்கள் விடுமுறையில் இருக்கும் போது சம்பாதிக்க எளிய வழிமுறையாகும். துபாயில், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் விடுமுறை வாடகை இணையதளங்களில் தங்கள் குடியிருப்புகளை விடுமுறை இல்லமாக பதிவு செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம். இது AirBnB போன்ற குறுகிய கால வாடகை இணையதளங்களில் உங்கள் குடியிருப்புப் பகுதியைப் பட்டியலிட உங்களை அனுமதிக்கிறது.

அதற்கு, உங்களிடம் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையிடம் (DET) தேவையான அனுமதியும் உங்கள் நில உரிமையாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழும் (NOC) உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல், ராஸ் அல் கைமாவின் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (RAKTDA) குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விடுமுறை இல்லமாக வைக்க அனுமதிக்கிறது. ராஸ் அல் கைமாவில், நீங்கள் RAKTDA இன் அனுமதியைப் பெற வேண்டும்.

2. உங்கள் அபார்ட்மெண்ட்டை குத்தகைக்கு விடுதல்:

துபாயில் உள்ள உங்கள் அபார்ட்மெண்ட்டை நீங்கள் குத்தகைக்கு விடலாம். ஆனால், துபாய் குத்தகைச் சட்டம் எண். 33, 2007 ஆம் ஆண்டின் 26 இன் படி விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, சட்டப்பிரிவு 18இன் படி, வீட்டு உரிமையாளர் வீட்டுவசதி தொடர்பான எந்தவொரு நடைமுறையையும் செய்ய குத்தகைதாரருக்கு தேவையான ஒப்புதல்களை வழங்க கடமைப்பட்டுள்ளார்.

அதேபோல், ஆவணப்படுத்தப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, குத்தகைதாரரின் ஒப்புதல் இல்லாமல் சொத்து அல்லது புதுப்பித்தல்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற உறுதிப்பாடும் இருக்க வேண்டும்.

3. பயண்படுத்தாத பொருட்களை ப்ளீ சந்தைகளில் (flea market) விற்பனை செய்தல்:

துபாய், அபுதாபி மற்றும் பிற எமிரேட்களில் பிரபலமான இடங்களில் இந்த ப்ளீ சந்தைகள் அமைப்பாளர்களால் நடத்தப்படுகின்றன. இது நீங்கள் வீட்டில் இனி பயன்படுத்தாத எந்தவொரு விருப்பமான பொருட்களையும் விற்க சிறந்த இடமாகும். வீட்டு உபயோகப் பொருட்கள், சிறிய மரச்சாமான்கள், ஆடைகள் மற்றும் மின் சாதனங்கள் முதல் புத்தகங்கள், DVDகள், உடைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் வரை, உங்கள் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பொருட்களை விற்கலாம்.

அதுமட்டுமிலாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல பூட்டிக் கடைகள் (boutique store) உள்ளன, அவை மக்கள் தங்கள் டிசைனர் பொருட்களை விற்கவும் விற்பனையில் கமிஷனைப் பெறவும் அனுமதிக்கின்றன.

4. ஃப்ரீலான்ஸிங் வேலை (Freelancing job:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃப்ரீலான்ஸ் அனுமதி ஆண்டுக்கு 530 திற்ஹம்சில் இருந்து தொடங்குகிறது, நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களில் ஃப்ரீலான்ஸிங் வேலை செய்து வருமானம் ஈட்டலாம். அமீரகத்தில் உள்ள ஃப்ரீலான்சிங் வலைத்தளங்களின்படி, கன்டென்ட் எழுதுதல், டேட்டா என்ட்ரி, லோகோ டிசைன் மற்றும் பிற கிராஃபிக் டிசைனிங் திறன்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற திறன்களுக்கு அதிக தேவை உள்ளது.

எனவே, உங்கள் எமிரேட்டில் உள்ள பொருளாதாரத் துறை அல்லது உங்கள் திறமைக்கு ஏற்ற இலவச மண்டலத்துடன் உங்கள் ஃப்ரீலான்ஸ் உரிமத்திற்கு விண்ணப்பித்து, உங்கள் வசதிக்கு ஏற்ற வேலைகளைத் தொடரலாம்.

5. பகுதிநேர வேலை (Part time job:

உங்களிடம் பகுதி நேர வேலை அனுமதி உள்ளது மற்றும் பகுதி நேர வேலைக்கு வாரத்திற்கு 20 மணிநேரத்திற்கு மேல் நீங்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை எனும்போது, நீங்கள் பகுதி நேர வேலை செய்யலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர்கள், மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MOHRE) மூலம் அனுமதிக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம் மற்றும் முதலாளியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டிய தேவையில்லை. எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிது ஓய்வு நேரத்தைக் கண்டால், ஆன்லைன் ஜாப் போர்டல்களில் பகுதி நேர வேலைகளைத் தேடலாம் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

6. படித்துக் கொண்டே வேலை செய்தல்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளி மாணவர்களும் பணி அனுமதி பெற்றிருந்தால் வேலை செய்யலாம். அவர்கள் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் MOHRE இலிருந்து சிறார் பணி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு வேலை அனுபவத்தைத் தருவதுடன் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கவும் உதவும்.

7. சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றுதல்:

துபாயை சுற்றிப்பார்க்க விரும்பும் மக்களுக்கு உதவுவதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்றால், நீங்கள் துபாயில் சுற்றுலா வழிகாட்டி உரிமத்திற்கு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) க்கு விண்ணப்பிக்கலாம், இது தொழில்முறை சுற்றுலா வழிகாட்டியாக எப்படி மாறுவது என்பது குறித்தும் பயிற்சி பெற உதவும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!