அமீரக செய்திகள்

அபுதாபியின் முக்கிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் ஓட்டினால் 400 திர்ஹம்ஸ் அபராதம்!! அதிகாரிகள் வழங்கிய நினைவூட்டல்….

அபுதாபி காவல்துறை கடந்த ஏப்ரல் 2023 இல் ஷேக் முகமது பின் ரஷீத் சாலையில் மணிக்கு 120 கிமீ என்று செயல்படுத்தப்பட்ட குறைந்தபட்ச வேக வரம்பு, இரு திசைகளிலும் இடதுபுறத்தில் உள்ள இரண்டு வேகமான பாதைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பொருந்தும் என்று நினைவூட்டலை வழங்கியுள்ளது.

பொதுவாக, எமிரேட்டின் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும், குறைந்தபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ வேகமானது, இரு திசைகளிலும் உள்ள போக்குவரத்திற்கும் பொருந்தும்.

ஆகவே, சாலைக்கான குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட நினைவூட்டலின் படி, விதியை மீறுபவர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், குறைந்தபட்ச வேக வரம்பு விதி மூன்றாவது மற்றும் கடைசி பாதைகளுக்கு பொருந்தாது என்பதால், குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் எந்த தடையுமின்றி மூன்றாவது பாதையை பயன்படுத்தலாம்.

இதனிடையே, சாலையின் கடைசிப் பாதையில் செல்லும் கனரக வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை சாலையில் பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்து ஓட்டத்தை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வேக வரம்பை செயல்படுத்துவதன் மூலம், மெதுவாக நகரும் வாகனங்களை வலது பாதையில் ஓட்டவும், பின்னாலிருந்து அல்லது இடமிருந்து வரும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் வலியுறுத்துவதே நோக்கமாகும்.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சாலை தெளிவாக இருப்பதை உறுதி செய்யாத வரை பாதைகளை மாற்றுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எப்போதும் தங்கள் வாகனத்திற்கும் முன் செல்லும் வாகனத்திற்கும் இடையே போதுமான தூரம் இருக்கும்போது மட்டுமே பாதையை மாற்றவும், பாதையை மாற்றும்போது இண்டிகேட்டர்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!