அமீரக செய்திகள்
UAE: டிசம்பர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்தினை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:
- சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.80 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் டிசம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.77 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.69 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் டிசம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.66 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.
- டீசல் : நவம்பர் மாதத்தில் 2.81 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் டிசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு 2.77 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
View this post on Instagram