இந்திய செய்திகள்

மலிவாகும் விமானக் கட்டணம்.. கூடுதல் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதாக அறிவித்த இண்டிகோ நிறுவனம்..!!

இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ தனது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது. எனவே, இண்டிகோ விமானங்களில் டிக்கெட் விலை மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் (ATF) விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், அதன் விலைகள் மாறும் நிலையில் இருப்பதால், எரிபொருள் விலைகள் அல்லது சந்தை நிலவரங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் மற்றும் தொடர்புடைய கூறுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று IndiGo விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் எரிபொருள் விலைகளின் நிலையற்ற தன்மையால் ஏற்படும் சவால்கள் உள்ள போதிலும், விமான நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவங்களை வழங்குவதில் உறுதியுடன் இருப்பதாக IndiGo குறிப்பிட்டுள்ளது.

ATF விலைகள் நவம்பரில் 6% மற்றும் டிசம்பரில் 4% குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 1 ஆம் தேதி கிட்டத்தட்ட 4% குறைக்கப்பட்டது. இதற்கு முன்பாக தொடர்ந்து நான்கு மாதங்கள் ATF விலையில் தொடர்ந்து அதிகரிப்பு காணப்பட்டது.

இதன் விளைவாக விமான நிறுவனம் அதன் அனைத்து வழித்தடங்களிலும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளில் எரிபொருள் விலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 40-45% வரை கூடுதல் செலவாகியதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!