சந்திரனைத் தொடர்ந்து சூரியனுக்கு வெற்றிகரமாக முதல் விண்கலத்தை செலுத்திய இந்தியா.. அடுத்தடுத்து வரலாற்று சாதனை படைப்பு..!!

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக அளவில் முத்திரையை பதித்த இந்தியா தனது அடுத்த பிரம்மாஸ்திரத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதுவரை யாருமே இறங்காத நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறங்க செய்து 14 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டி அந்த சுவடுகளே இன்னும் மாறாத நிலையில் சூரியனை ஆராய்ச்சி செய்யும் “ஆதித்யா எல் ஒன்” சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSV C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதுவரை ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை செலுத்தி இருந்தாலும், இந்தியா சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். சூரியனிலிருந்து வெளிவரும் அதி தீவிரமான வெப்ப அலைகளின் காரணமாக எந்த நாடுகளும் சூரியன் மீது இதுவரை கவனம் செலுத்தாத நிலையில் தற்போது இந்தியா யாருமே முன்னெடுக்காத ஒரு சவாலை சந்திக்க தயாராகியுள்ளது.
இதன் மூலம் சூரியனை குறித்த நாம் இதுவரை அறியாத பல்வேறு தகவல்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சூரிய கதிரின் தன்மைகள், காந்த புலத்தின் தன்மைகள், சூரியனின் வெளிப்புற படலம் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரியனின் காந்த புலன்களானது பூமியில் உள்ள தொலைதொடர்பு கதிர்கள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் போன்றவற்றை பாதிக்கும் திறன் கொண்டதாகும். எனவே சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புலன்களை பற்றி நாம் ஆராய்ச்சி மேற்கொண்டால், தொலைத் தொடர்பு துறையில் நமக்கு விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.