UAE: பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் கண்ணாடி குவிமாடத்துடன் ஷார்ஜாவில் வரவிருக்கும் புதிய மசூதி..!!

ஷார்ஜாவில் உள்ள அல் தைத் (Al Dhaid) நுழைவாயிலில் கண்ணாடி பந்து போன்ற குவிமாடத்தைக் (dome) கொண்ட தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்ட மசூதி ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த அழகிய மசூதி முழுக்க முழுக்க ஒரு தாராளமான கொடை வள்ளலின் செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மசூதியின் குறிப்பிடத்தக்க பகுதி ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மசூதியின் தற்காலத்திற்குரிய பாணியிலான மினார் ஒரு தனித்துவமான சுழல் வடிவத்தில் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி ஒரு கோள கண்ணாடி அமைப்பு ஜொலிக்கிறது, அது வழிபாட்டாளர்கள் தொழுகைக்காக கூடும் இடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மசூதியின் உட்புறம் ஒரு விசாலமான மற்றும் நன்கு வெளிச்சமான சூழலைக் கொண்டுள்ளது. கூடுதலாக, நுழைவாயிலில், குரானில் இருந்து ஆயத் அல்-குர்சியின் முக்கிய கல்வெட்டு அமைப்பிற்கு ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கிறது.
இந்த மசூதியின் கவர்ச்சியான வடிவமைப்பை ஷார்ஜா TV அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவாக வெளியிட்டிருந்தது. மசூதியின் அழகிய வடிவமைப்பைப் பார்த்த பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel