ஷார்ஜாவில் முக்கிய ரவுண்டானா சாலை இன்று முதல் மூடல்.. எப்போது வரை..??

ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் (ஜனவரி 26) ஒரு ரவுண்டானா முழுவதுமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எமிரேட்டில் உள்ள அல் கராயன் 1, 3, 4 மற்றும் 5 ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கொயரில் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 28 ஞாயிற்றுக்கிழமை வரை முழு சாலை மூடப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சாலையின் செயல்திறனை அதிகரிக்கவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரவுண்டானாவில் பராமரிப்பு பணிகள் தவிர, ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை முதல் பிப்ரவரி 21 புதன்கிழமை வரை யுனிவர்சிட்டி சிட்டி ஹால் வரை செல்லும் சாலையை மூடுவதாகவும் ஷார்ஜா RTA அறிவித்திருந்தது.
சாலை மூடல் பகுதியைக் குறிக்கும் வரைபடம்:
இந்த சாலை மூடல் ஷார்ஜா லைட்ஸ் ஃபெஸ்டிவலுக்கு முந்தைய வேலைகள் மற்றும் அதன் போது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் போக்குவரத்து மற்றும் திசை அடையாளங்களை பின்பற்றுமாறும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel