அமீரக செய்திகள்

துபாயில் பயன்பாட்டிற்கு வரும் இரண்டு புதிய சாலிக் கேட்டுகள்.. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க RTA நடவடிக்கை..!!

துபாயின் டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் (Salik), துபாயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்தை மேம்படுத்தவும் நெரிசலைக் குறைக்கவும் புதிதாக இரண்டு சாலிக் இடங்களைத் திறக்க உள்ளது.

RTA வின் விரிவான போக்குவரத்து இயக்க ஆய்வுக்குப் பிறகு, புதிய சாலிக் கேட்களை நிறுவுவதற்கு பின்வரும் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அல் கைல் சாலையில் பிசினஸ் பே கிராசிங் இடத்திலும், ஷேக் சையத் சாலையில் அல் சஃபா சவுத் இடத்திலும் இந்த புதிய சாலிக் கேட்கள் நிறுவப்படவுள்ளது.

அத்துடன் இந்த சாலிக் கேட்கள் நவம்பர் 2024க்குள் திறக்கப்படும் எனவும், இவை இரண்டும் சாலிக்கின் மிகப்பெரிய வெற்றிகரமான IPO மற்றும் DFM இல் பட்டியலிடப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டுள்ள சாலிக்கின் முதல் புதிய டோல்-கேட்டுகள் எனவும் கூறப்படுகிறது.

RTAவின் படி, இரண்டு சாலிக் கேட்டுகளும் அல் கைல் சாலையில் 15 சதவீதம் வரையிலும், அல் ரபாத் தெருவில் 16 சதவீதம் வரையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஷேக் சையத் சாலையிலிருந்து மைதான் (meydan) ஸ்ட்ரீட் வரையிலான வலதுபுறம் திரும்பும் போக்குவரத்தை 15 சதவீதம் வரை குறைக்க இந்த புதிய திட்டம் வழிவகுக்கும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹதாத் அவர்கள் கூறுகையில், இரண்டு பரபரப்பான இடங்களில் புதிய டோல் கேட்கள் சேர்க்கப்படுவது, சாலிக்கின் IPO நேரத்தில் நாங்கள் அமைத்த வளர்ச்சித் திட்டத்தில் சமீபத்திய மைல்கல்லைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், இந்த புதிய நுழைவாயில்களை அறிமுகப்படுத்துவதில் RTA உடனான எங்கள் கூட்டாண்மை ஸ்மார்ட் மற்றும் நிலையான இயக்கம் தீர்வுகளுடன் துபாயின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

புதிய வருவாய் பாதைகள்:

பிசினஸ் பே கிராசிங் மற்றும் அல் சஃபா சவுத் ஆகிய இரண்டும் நகரின் முக்கிய இடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மிக முக்கியமான நுழைவாயில்களாகும். இவ்வாறு நகரத்தில் அதிகமான சுங்கச்சாவடிகள் உறுதிசெய்யப்பட்டிருப்பது வருவாய் சாத்தியங்களை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் போக்குவரத்து சுங்கக் கட்டணக் கொள்கைகள், மெட்ரோ, பேருந்துகள், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மென்மையான இயக்கம் விருப்பங்கள் போன்ற வெகுஜனப் போக்குவரத்து வழிகளை நோக்கி பொதுமக்களை மாற்ற இது ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பயண நேரம் குறைப்பு:

RTA வின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மத்தார் அல் டயர், துபாயில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகள் ஆண்டுதோறும் மொத்த பயண நேரத்தை 6 மில்லியன் மணிநேரம் குறைக்க உதவுவதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அல் மக்தூம் மற்றும் அல் கர்ஹூத் பாலங்களில் போக்குவரத்து அளவை 26 சதவீதம் குறைத்து, ஷேக் சையத் சாலை மற்றும் அல் இத்திஹாத் தெருவில் பயண நேரத்தை 24 சதவீதம் குறைத்து, ஆண்டுக்கு 9 மில்லியன் ரைடர்ஸ் மூலம் வெகுஜன போக்குவரத்து பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!