அமீரக செய்திகள்

இந்த விமானத்தின் போர்டிங் பாஸ் இருந்தால் மட்டும் போதும்..!! துபாய் முழுவதும் சுற்றிப்பார்க்க பல்வேறு தள்ளுபடிகளை வழங்கும் விமான நிறுவனம்..!!

எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் பயணிக்கும் நபர்களுக்கு விமான நிறுவனம் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி மே 1 மற்றும் செப்டம்பர் 30 க்கு இடையில் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்யும் எவரும் தங்கள் போர்டிங் பாஸை வைத்திருப்பதன் மூலம் துபாயின் எண்ணற்ற இடங்களில் தள்ளுபடி மற்றும் ப்ரொமோஷன்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடத்தின் கோடைகாலத்திலும் மை எமிரேட்ஸ் பாஸ் எனும் கோடைகால ப்ரொமோஷனை செயல்படுத்தும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த வருடமும் ஐந்து மாதங்களுக்கு இதனை செயல்படுத்துகிறது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுடைய போர்டிங் பாஸினால் நூற்றுக்கணக்கான சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு மற்றும் சாப்பாட்டு கடைகளில் பல தள்ளுபடிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மே மாதத்தில், எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு வரும் எவரும் இலவச துபாய் மெரினா குரூஸை அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. துபாயின் மெரினா சைட்ஸீயிங் குரூஸ் டிக்கெட் கவுண்டரில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் இந்த போர்டிங் பாஸை டிஜிட்டல் அல்லது பிரிண்ட் பண்ணிய முறையில் காட்டலாம் என்றும் இதற்காக முன்பதிவு செய்ய தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஹார்வி நிக்கோல்ஸ், கால்வின் க்ளீன், மோசினோ மற்றும் டாமி ஹில்ஃபிகர் போன்ற சிறந்த டிசைனர் பிராண்டுகள் மற்றும் ஸ்டோர்களில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரோசானோ ஃபெரெட்டி சலோன் மற்றும் அர்மானி ஸ்பா உட்பட நகரம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் லா பெர்லே, துபாய் க்ரீக் தோவ் குரூஸ், தி க்ரீன் பிளானட் மற்றும் டாப் ஆஃப் புர்ஜ் கலிஃபா ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளில் தள்ளுபடியைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அட்லாண்டிஸில் உள்ள அக்வாவென்ச்சர், தி பாம், IMG வேர்ல்ட் ஆஃப் அட்வென்ச்சர் மற்றும் அரேபியன் அட்வென்ச்சர்ஸ் போன்ற இடங்களிலும் பயணிகள் தள்ளுபடியைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களைக் காண My Emirate Pass என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!