அமீரக செய்திகள்

அமீரக புத்தாண்டு கொண்டாட்டம்.. துபாய், அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா எமிரேட்களில் நடத்தப்பட்ட அற்புதமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள்….

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு எமிரேட்களில் புத்தாண்டை வரவேற்க வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் காட்சிகள், லேசர் ஷோ மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற எமிரேட்களில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான வான வேடிக்கை நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது.

நாடு முழுவதும் 2024 ஐ வரவேற்க நடத்தப்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகளை எமிரேட் வாரியாக பின்வருமாறு பார்க்கலாம்.

துபாய்:

துபாய் முழுவதும் எட்டு இடங்களில் பிரம்மாண்டமாக வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்றிரவு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, துபாய் ஃப்ரேம், துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ், புர்ஜ் அல் அராப், குளோபல் வில்லேஜ் மற்றும் துபாய் ஃபவுன்டைன் போன்ற பல்வறு இடங்களிலும் வானை ஒளியூட்டும் பட்டாசுகளுடனும், கொண்டாட்டங்களுடனும் பார்வையாளர்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

அபுதாபி:

அபுதாபியின் அல் வத்பாவில் நடைபெற்று வரும் ஷேக் சயீத் ஃபெஸ்டிவலில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சாதனை படைக்கும் 60 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அத்துடன் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் 5,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அடங்கிய விரிவான ட்ரோன் காட்சி, பெரிய லேசர் நிகழ்ச்சி மற்றும் கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ராஸ் அல் கைமா:

துபாய் மற்றும் அபுதாபியைப் போலவே, ராஸ் அல் கைமா எமிரேட்டிலும் நேற்றிரவு நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளது. சுமார் எட்டு நிமிட வாணவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சியுடன் பார்வையாளர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே பல கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ள ராஸ் அல் கைமா, இந்தாண்டு 5.8 கிமீ நீளமுள்ள ‘Longest chain of aquatic floating fireworks’ மற்றும் 2 கி.மீ. நீளமுள்ள ‘Longest straight-line drones display’ ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் சாதனயை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!