அபுதாபி சாலையில் அசால்ட்டாக செல்லும் பாதசாரிகள்!! எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட அபுதாபி காவல்துறை…

அபுதாபி காவல்துறையானது, சாலைகளில் நியமிக்கப்படாத இடங்களில் சாலைகளைக் கடப்பது, சாலையைக் கடக்கும் போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.
சாலையைக் கடக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்திய காவல்துறையானது, அதன் சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட வீடியோவில், வாகனங்கள் வேகமாக வரும் முக்கிய சாலைகளில் பலர் சாதாரணமாக நடந்து செல்வதைக் காணலாம்.
மேலும், குறிப்பிடப்படாத பகுதிகளிலிருந்து பாதசாரிகள் சாலையைக் கடப்பதையும் வீடியோ காட்டுகிறது, இது போன்ற நேரங்களில் கார்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும் அல்லது வளைந்து செல்ல வேண்டி இருக்க வேண்டும்.
#أخبارنا | بالفيديو .. #شرطة_أبوظبي تدعو المشاة لاستخدام الأماكن المخصصة للعبور
التفاصيل:https://t.co/GFemQo6wYr pic.twitter.com/m3qcDYVmNk
— شرطة أبوظبي (@ADPoliceHQ) February 16, 2024
இவ்வாறு கவனக்குறைவாகவும், சட்டவிரோதமாகவும் சாலையைக் கடப்பது அதிக விபத்துகளை ஏற்படுத்தும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel