வளைகுடா செய்திகள்

கொரோனாவிற்கான தடுப்பூசியின் 3 டோஸ்களை போட்டவர்களுக்கே ஹஜ் செய்ய அனுமதி..!! சவூதி அரசு தகவல்..!!

கொரோனாவல் கடந்த இரு ஆண்டுகளாக சவூதியில் ஹஜ் செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்திருப்பதால் அதிகளவு எண்ணிக்கையிலான இஸ்லாமிய மக்களை ஹஜ் எனும் புனித பயணம் மேற்கொள்வதற்கான அனுமதியை சவூதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் 2020 ம் ஆண்டு 1,000 பேருக்கும் 2021 ம் ஆண்டு 60,000 பேருக்கும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஒரு மில்லியன் மக்கள் ஹஜ் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் ஹஜ்ஜின் போது அதிக சதவீத மக்கள் சவூதி அரேபியாவிற்கு வெளியில் இருந்து வரும் வழிபாட்டாளர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து நாடுகளும் விதிவிலக்கு இல்லாமல் ஹஜ்ஜில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹிஷாம் சயீத் அறிவித்துள்ளார்.

அத்துடன் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் முஸ்லிம்களை சவூதி வரவேற்கிறது என்றும் மேலும் எந்த நாடும் ஹஜ் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படாது என்றும் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்கள் என்ற ஒதுக்கீடுகள் அடிப்படையில் ஹஜ் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும், இது இந்த ஆண்டு ஹஜ்ஜில் சுகாதார நிலைமைகள் நிறைவடைந்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஹஜ் செய்ய, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசியின் மூன்று டோஸ்களை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் பின்வரும் விதிமுறைகளின்படி நடத்தப்படும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அவை

1. சவூதி சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதி.

2. நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் வழிபாட்டாளர்கள் சவூதிக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கோவிட்-19 PCR சோதனையின் எதிர்மறையான முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!