அபுதாபியின் முதல் இந்து கோவில் திறப்பு விழா..!!! இரண்டு நாள் பயணமாக அமீரகத்திற்கு வரவிருக்கும் பிரதமர் மோடி!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் இந்து கற்கோவிலை திறந்து வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக அமீரகத்திற்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
எதிர்வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அமீரகத்திற்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலான BAPS மந்திரை திறந்து வைப்பார் என்றும், சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரிடமும் உரையாற்றுவார் என்றும்வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருகையின்போது, அவர் அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடன் இரு நாடுகளுக்கிடையேயான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏழாவது முறையாக பயணம் செய்யவுள்ள திரு.மோடி, அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களையும் சந்திப்பார் என்று MEA தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக MEA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அல் மக்தூமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாடு 2024 (World Government Summit 2024) இல் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று உச்சிமாநாட்டில் சிறப்பு உரை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23 வரையிலான அன்னிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் நான்கு முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாக உள்ளது. சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகமாக வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel