அமீரக செய்திகள்

துபாயில் 10 நாள் நடைபெறும் ‘ரமலான் நைட் மார்கெட்’.. பார்வையாளர்களுக்கு இலவச நுழைவு..

துபாயில் ஒவ்வொரு வருடமும் துபாய் உலக வர்த்தக மையத்தில் (Dubai World Trade Centre – DWTC)  நடைபெற்று வரும் பிரபல ‘Ramadan Night Market’ இந்த வருடமும் கடநம ஞாயிற்றுக்கிழமை முதல் துபாய் உலக வர்த்தக மையத்தில் (Dubai World Trade Centre – DWTC) நடைபெற்று வருகிறது. DWTC இன் ஹால் 7, கான்கோர்ஸ் 2 இல் அமைந்துள்ள, 10-நாள் இரவுச் சந்தை கிட்டத்தட்ட 25,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று DWTC தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரவுச் சந்தைகளைப் போன்றே தற்பொழுதும் ஃபேஷன் மற்றும் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், நகைகள், வீட்டுப் பொருட்கள், காலணிகள், விளையாட்டு உடைகள், ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றைக் காணலாம்.

MAXPO கண்காட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ஏப்ரல் 18 வரை நடைபெறவுள்ள இரவுச்சந்தையில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பலவிதமான உணவு வகைகள், பானங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த ரமலான் இரவுச் சந்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டுள்ளது, அதேவேளை உலகம் முழுவதிலுமிருந்து பல கலாச்சார விற்பனை நிலையங்களை நடத்துகிறது. மேலும் இங்கு பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குடியிருப்பாளர்கள் மற்ற மாதங்களை விட ரமலான் மாதத்தில் வழக்கத்தை விட தாமதமாக ஷாப்பிங் செய்வார்கள் மற்றும் வேலை முடிந்து நோன்பில் இருக்கும் குடியிருப்பாளர்கள் ஓய்வு எடுப்பார்கள் என்பதால், இந்த ரமலான் கண்காட்சிகள் மாலை தொடங்கி, நள்ளிரவு வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!