அமீரக செய்திகள்

அபுதாபியில் ‘Vehicle Registration’-ஐ ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் உட்பட முழு விபரங்களும் உள்ளே…

அபுதாபியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாகனத்திற்கான வாகனப் பதிவு (vehicle registration) காலாவதியாகிவிட்டதா?? இவ்வாறு காலாவதியாக கூடிய வாகன பதிவினை அமீரகத்தில் ஆன்லைனிலேயே தேவையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மிகவும் சுலபமாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

இதற்கான செயல்முறையை, நீங்கள் UAEPASS-ற்கு பதிவுசெய்து, ஸ்மார்ட் செயலியில் முக்கியமான ஆவணங்களைப் பதிவேற்றியிருந்தால், மிகவும் எளிதாக முடிக்கலாம். இந்த முறையில் அபுதாபியில் உங்கள் வாகனப் பதிவை புதுப்பிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

உங்கள் வாகனப் பதிவைப் புதுப்பிக்க பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

  • கார் பதிவு அட்டை அசல் (car registration card)
  • அசல் எமிரேட்ஸ் ஐடி
  • அசல் பாஸ்போர்ட்
  • வாகனக் காப்பீட்டுக் பாலிசி அசல்

செலவு

உங்கள் வாகனத்தின் வகை (தனியார் அல்லது பொது), அதன் எடை மற்றும் தயாரிப்பின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும். இந்த வரம்பில் மிகக் குறைந்த விலை 120 திர்ஹம்ஸ் மற்றும் புதுப்பித்தலுக்கு 1,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்:

கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வாகனப் பதிவை நீங்கள் புதுப்பிக்கலாம்:

  • படி 1: Tamm இணையதளம் அல்லது அப்ளிகேஷனிற்கு சென்று UAE PASS-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.
  • படி 2: உள்நுழைந்ததும் ‘Drive & Transport’ பிரிவில், ‘Manage Personal Vehicle’ மற்றும் ‘Renew Vehicle Registration’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: பின்னர் கீழே உள்ள ‘Start’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • படி 4: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
  • படி 5: இறுதியாக கட்டணத்தைச் செலுத்தவும்

மேலே உள்ள வழிமுறைகளை நீங்கள் முடித்தவுடன், உங்கள் புதுப்பிக்கப்பட்ட வாகன உரிமத்தைப் பெறலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!