அமீரக செய்திகள்

அமீரகத்தில் ‘Free Zone’ லைசென்ஸில் தொழில் தொடங்குவது எப்படி..? அனைத்து விபரங்களும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகம் தொடர்பான சட்டங்கள், வணிகங்களை அமைப்பதில் உள்ள எளிமை, விரைவான செயலாக்க நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், தனிநபர்கள் மற்றும் வணிகர்களை அமீரகத்திற்கு கவர்ந்திழுக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஏற்கனவே, கடந்த ஆண்டான 2023 இல் அமீரகம் அதன் வணிக பரிவர்த்தனைகள் சட்டத்தில் (Commercial Transactions Law) பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த மாற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தொழில் தொடங்குவதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 18 ஆக குறைத்தது ஆகும், இது பொருளாதார அமைச்சகத்தால் மாற்றப்பட்டது.

இதன் காரணமாக அமீரகத்தில் தொழில் தொடங்குவதற்கு இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு அமீரகத்தில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நிலப்பகுதியில் (Mainland) தொழில் தொடங்குவது அல்லது இலவச மண்டலத்தில் (Free Zone) தொழில் தொடங்குவது என இரண்டு வகையான விருப்பங்கள் உள்ளன.

அதில் அமீரகத்தின் இலவச மண்டலத்தில் (free zone) உங்கள் தொழிலை அமைக்க நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கான முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதற்கான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சகத்தின்படி, அமீரகத்தில் இருக்கக்கூடிய ஃப்ரீ ஸோனில் வணிகத்தை அமைப்பது மிகவும் எளிதானது மற்றும் இதனை ஆறு எளிய படிகளில் நிறைவேற்ற முடியும்.

படி 1: உரிமத்தின் வகை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு அதற்கான உரிமத்தைப் பெறுவது அவசியம். நாட்டில் வணிகம் செய்வதற்கு அமீரக ஃப்ரீ ஸோன்கள் வழங்கக்கூடிய பல உரிமங்கள் உள்ளன. அந்தவகையில், உங்கள் வணிகத்தின் தன்மை என்ன மற்றும் அது எந்த வகையின் கீழ் வருகிறது என்பதைக் கண்டறிவதே உங்கள் முதல் படியாகும். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வணிக உரிமத்தின் வகைகள்:

  • கமெர்ஷியல் டிரேட்
  • கன்சல்டன்சி சர்வீஸ்
  • தொழில்துறை
  • கல்வி
  • ஊடகம்
  • இ-காமர்ஸ்
  • ஆஃப்ஷோர் (offshore)
  • ஃப்ரீலான்ஸர்
  • கிடங்கு (warehousing)
  • உற்பத்தி (manufacturing)
  • இன்னோவேஷன் (innovation)

படி 2: சட்ட அமைப்பு (Legal structure)

உங்கள் நிறுவனத்தில் இருக்க வேண்டிய மூன்று வகையான சட்ட கட்டமைப்புகள் உள்ளன. உங்கள் வணிகத்தின் தன்மை மற்றும் அதன் தேவைகளின் அடிப்படையில், நீங்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பைப் பின்பற்ற வேண்டும்.

  • Free Zone Limited Liability Company (FZ LLC)
  • Free Zone Company (FZ Co.)
  • Free Zone Establishment (FZE)

படி 3: வர்த்தக பெயர் பதிவு (trade name registration):

அமீரக பொருளாதார மேம்பாட்டுத் துறையின் அப்ளிகேஷன் அல்லது இணையதளத்தின் மூலம் உங்கள் வர்த்தகப் பெயருக்கு (trade name) விண்ணப்பிக்கலாம். முக்கியமாக, உங்கள் நிறுவனத்தின் வர்த்தகப் பெயர் என்பது உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் அது வேறு எந்த பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரையும் ஒத்திருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும், உங்கள் வர்த்தகப் பெயரானது பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்:

  1. உங்கள் வர்த்தகப் பெயர் நிறுவனத்தின் சட்ட அமைப்பைக் குறிக்க வேண்டும். (உதாரணமாக LLC)
  2. இது பொது மக்களை புண்படுத்தும் வகையில் அல்லது தகாத வார்த்தைகளைக் கொண்டிருக்கக் கூடாது.
  3. இது உங்கள் வணிகம்/நிறுவனத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
  4. வர்த்தகப் பெயரில் அமீரக ஆட்சியாளரின் பெயர் அல்லது லோகோ அல்லது அதிகாரப்பூர்வ UAE லோகோ அல்லது வெளிநாட்டு அரசாங்கம் அல்லது அரசாங்க அமைப்புகளின் பெயர் அல்லது லோகோ இருக்கக்கூடாது.
  5. வர்த்தக பெயர் ஏற்கெனவே வேறு நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
  6. வர்த்தகப் பெயர் மற்றும் வர்த்தக முத்திரை முறையே பொருளாதார மேம்பாட்டுத் துறை மற்றும் பொருளாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  7. வர்த்தக பெயர் சான்றிதழ்கள் புதுப்பித்தலுக்கு உட்பட்டவை.

படி: 4. வணிக இடம்

மேற்கூறிய செயல்முறைகளை அடுத்து, உங்கள் வணிகத்திற்கான பொருத்தமான இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் அலுவலக இடமானது உங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் உங்கள் வணிகத்தின் தன்மையைப் பொறுத்தது.

ஒரு தொழில்முறை உரிமத்திற்கு நீங்கள் அலுவலகத்தை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது மெய்நிகர் அலுவலகத்தில் (Virtual Office) பதிவு செய்யலாம். உங்கள் வணிக உரிமத்தைப் பெற்றவுடன் வாடகைக்கோ அல்லது சொந்தமாக வாங்கவோ உங்களுக்கு பொருத்தமான அலுவலகத்தை நீங்கள் பெறலாம். பொதுவாக, ஃப்ரீ ஸோனில் நீங்கள் வாடகைக்கு அலுவலகங்களை பெறலாம். நாட்டில் 40 க்கும் மேற்பட்ட இலவச மண்டலங்கள் உள்ளன.

அமீரகத்தின் ஃப்ரீ ஸோன்கள் முதலீட்டாளர்கள் தங்கள் வணிகங்களை அமைக்க பல வசதிகளை வழங்குகின்றன. இதில் IT உள்கட்டமைப்பு, NOC கடிதங்களைப் பெறுதல் அல்லது ‘To whom it may concern’ கடிதங்கள் மற்றும் குடியிருப்பு விசாக்களை வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் ரத்து செய்தல் ஆகியவை அடங்கும்.

படி 5: ஆரம்ப அனுமதி பெறுதல்

உங்கள் வணிகத்திற்கான ஆரம்ப ஒப்புதலைப் பெற, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, அனைத்து கட்டாய நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சில பொதுவான ஆவணங்கள் இங்கே:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • வணிக திட்டம்
  • ஏற்கனவே உள்ள வர்த்தக உரிமம்/பதிவுச் சான்றிதழின் நகல்
  • நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட மேலாளரின் பாஸ்போர்ட் நகல்கள்
  • நியமிக்கப்பட்ட மேலாளருக்கான பதிவு அடையாளக் குறியீடு படிவம் (RIC) (அசல் மற்றும் நோட்டரிஸ் செய்யப்பட்டது)
  • நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட மேலாளரின் மாதிரி கையொப்பங்கள்
  • உரிமைப் பத்திரங்கள்
  • முதலீட்டு யோசனை மற்றும் முதலீட்டாளரின் திட்டத்தை தெளிவுபடுத்தும் சுருக்கமான கடிதம் (letter of intent)
  • 2 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் அல்லது வங்கியிடமிருந்து குறிப்புச் சான்றிதழ் (தேவைக்கேற்ப)
  • ஃப்ரீலான்ஸர்கள்/தொழில் செய்பவர்களுக்கு பொதுவாக தேவைப்படும் ஆவணங்கள்
  • பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
  • CV அல்லது சுயவிவரம்
  • வங்கியிலிருந்து குறிப்புக் கடிதம் (reference letter)
  • இயக்குனருக்கான பதிவு அடையாளப் படிவம் (RIC) (அசல் மற்றும் அறிவிக்கப்பட்ட ஆவணம்)

6: பணம் செலுத்துதல்:

இறுதியாக, உங்கள் நிறுவனத்திற்கான உரிமத்தைப் பெறுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் கட்டணத்தில் நிறுவனத்தின் உரிமம் வழங்குவதற்கான கட்டணமும் அடங்கும். இதற்காக உங்களிடம் பின்வரும் சில ஆவணங்கள் கேட்கப்படும்:

  • பதிவு செய்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • மேலாளர்/இயக்குனரை நியமிக்கும் தீர்மானம் (அறிவிப்பு மற்றும் சான்றளிக்கப்பட்டது)
  • மேலாளர்/இயக்குனருக்கு வழங்கப்பட்ட பவர் ஆஃப் அட்டார்னி (நோட்டரிஸ் மற்றும் சான்றளிக்கப்பட்டது)
  • மெமோரண்டம் மற்றும் கட்டுரைகள் (நோட்டரிஸ் மற்றும் சான்றளிக்கப்பட்டது)
  • மேலாளர்/இயக்குனர் மாதிரி கையொப்பம் (நோட்டரிஸ் மற்றும் சான்றளிக்கப்பட்டது)
  • மேலாளர்/இயக்குனரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • பங்கு மூலதன தகவல்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!