அமீரக செய்திகள்

எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்காக அமீரகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்து சேவைகள்..!! முழு விபரங்கள்..!!

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 70 பேருந்துகளை இயக்கும் என்று அறிவித்துள்ளது.

இந்த பேருந்துகள் வார நாட்களில் தினந்தோறும் மொத்தம் 193 பயணங்கள் (trips) மற்றும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 213 பயணங்கள் (trips) என இயக்கப்படும். எக்ஸ்போ 2020 இல் செயல்படும் புதிய வழித்தடங்களின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபி, அல் அய்ன் சேவைகள்:

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை எக்ஸ்போ 2020 பார்வையாளர்களை கொண்டு செல்வதற்காக அபுதாபியில் உள்ள நான்கு நிலையங்களில் இந்த பேருந்து சேவைகள் இயக்கப்படும். அவை:

அபுதாபி சர்வதேச விமான நிலையம்:

சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை 10 பேருந்துகளின் மூலம் இரு திசைகளிலும் தினசரி 31 பயணங்களை (trips) இயக்க RTA திட்டமிட்டுள்ளது. இது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 33 பயணமாக (trips) இருக்கும்.

அபுதாபி பேருந்து நிலையம்:

பத்து பேருந்துகள் சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் தினசரி 26 பயணங்களையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 29 பயணங்களையும் மேற்கொள்ளும்.

மெரினா மால் நிலையம்:

சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் தினசரி 27 பயணங்கள் மற்றும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 28 பேருந்துகளை இயக்க பத்து பேருந்துகள் ஒதுக்கப்படும்.

அல் அய்ன் பேருந்து நிலையம்:

ஒன்பது பேருந்துகள் சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் 22 பயணங்கள் மற்றும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 25 பயணங்கள் என இயக்கப்படும்.

ஷார்ஜா சேவை:

ஒவ்வொரு 15 அல்லது 20 நிமிடங்களுக்கும் ஷார்ஜாவில் இரண்டு இடங்களிலிருந்து எக்ஸ்போ பார்வையாளர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும். அவை:

அல் ஜுபைல் பேருந்து நிலையம் (Al Jubail Bus Station):

10 பேருந்துகள் மூலம் சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் தினசரி 29 பயணங்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 33 பயணங்களும் என இயக்கப்படும். சேவையானது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை கிடைக்கும்.

மூவைலே ஸ்டேஷன் (Muwaileh Station):

பத்து பேருந்துகள் மூலம் சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் தினசரி 32 பயணங்களையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 37 பயணங்களையும் இயக்க வேண்டும். சேவை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை கிடைக்கும்.

ராஸ் அல் கைமா, அஜ்மான் சேவை:

ஒவ்வொரு மணி நேரமும் RTA ராஸ் அல் கைமா பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அஜ்மான் வழியாக எக்ஸ்போவுக்கு செல்லும் ஏழு பேருந்துகளை இயக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவை வார நாட்களில் 17 தினசரி பயணங்களாகவும் மற்றும் வார இறுதி நாட்களில் 18 பயணங்களாகவும் இயக்கப்படும்.

ஃபுஜைரா சேவை:

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை சிட்டி சென்டர் ஃபுஜைரா அருகே நான்கு பேருந்துகள் எக்ஸ்போ 2020 பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும்.  சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் தினசரி ஒன்பது பயணங்களும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 10 பயணங்களும் இந்த இடத்தில் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!