அமீரக செய்திகள்

அமீரகத்தின் தனியார் நிறுவனங்களுக்கு எதிரான அபராத விதிமுறைகள் என்னவென்று தெரியுமா? விபரம் உள்ளே..!

அமீரகத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சரியான சமயத்தில் ஊதியம் செலுத்தாத முதலாளிகளுக்கு எதிராக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமான (MOHRE) புதிய ஆணையை வெளியிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் 50க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் ஊதியம் வழங்காமல் இருப்பது போன்ற 7 விதமான புதிய அபராதங்களை MOHRE அறிவித்துள்ளது.

1. தொழிலாளர்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால், ஊதியம் வழங்கும் தேதியிலிருந்து 3வது மற்றும் 10வது நாளுக்குப் பின்னர் ஊதியம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நினைவூட்டல்கள் நிறுவனங்களுக்கு வரும்.

2. 50க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பெரும் தேதியிலிருந்து 17வது நாளுக்குப் பிறகும் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தினால், அந்த நிறுவனத்திற்கு அமைச்சகத்தின் ஆய்வுகள் மற்றும் எச்சரிக்கை விடப்படும்.

3. ஊதியம் வழங்கும் குறித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கத் தவறிய முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு வெளியிடப்படும். இல்லையெனில் MOHRE-இன் ஆபத்துக்குறிய நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனங்கள் சேர்க்கப்படும்.

4. நிறுவனங்கள் ஏதேனும் விதி மீறல்களை மீண்டும் செய்தாலோ, ஒன்றுக்கு மேற்பட்ட விதிமீறல்களில் செய்தாலோ, அந்த நிறுவனங்கள் அமைச்சகத்தின் ஆய்வுகளுக்கு உட்பட்டு, அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

5. ஊதியம் வழங்கும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் கடந்தும் ஊதியம் வழங்காத நிறுவனங்களுக்கு புதிய பணிக்கான உத்தரவு வழங்குவது நிறுத்தப்படும்.

6. தொடர்ந்து மூன்று மாதங்கள் கடந்தும் ஊதியம் வழங்காத நிறுவனங்கள் பணி அனுமதிகளை வழங்கவோ, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பனி அனுமதியை புதுப்பிக்கவோ முடியாது.

7. ஊதியம் வழங்கும் நாளிலிருந்து தொடர்ந்து 6 மாதங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காத நிறுவனங்களுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொது வழக்குக்கு பரிந்துரைக்கப்படும் மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு 7 விதமான புதிய அபராதங்களை MOHRE தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!