அமீரக செய்திகள்

UAE: மேம்படுத்தப்பட்டுள்ள Alhosn அப்ளிகேஷன்..!! புதிய சிறப்பம்சம் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அதிகாரிகள் ‘AlHosn’ செயலியின் அப்கிரேட் (upgrade) செய்யப்பட்ட வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த அப்கிரேடட் செயலியில் பிறந்தது முதல் 18 வயது வரை குழந்தைகளுக்கான விரிவான தடுப்பூசி பதிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால், இந்த மேம்படுத்தப்பட்ட செயலியானது நாடு முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி கவரேஜில் அதிக சதவீதத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா தொடர்பான காண்டாக்ட் ட்ரேஸ் செய்தல் (contact tracing) மற்றும் சுகாதாரப் பரிசோதனைக்கான அதிகாரப்பூர்வ அமீரக செயலியாக இருந்த AlHosn இப்போது தடுப்பூசிகளுக்கான தேசிய டிஜிட்டல் ஹெல்த்கேர் தளமாக உள்ளது.

குறிப்பாக, குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தடுப்பூசி நிலையை கண்காணிக்க உதவும் பரந்த அளவிலான டிஜிட்டல் தீர்வுகளை இது வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, இனி பயனர்கள் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை அணுகலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரக அரசாங்கம் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்தது முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான தடுப்பூசிகளை கட்டாயமாக்கியுள்ளது. இதில் காசநோய், ஹெபடைடிஸ் B, போலியோ மற்றும் டெட்டனஸ் போன்றவற்றுக்கு எதிரான  தடுப்பூசிகளும் அடங்கும். தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின்படி குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவுகளை அணுகுவதற்கு இந்த புதுப்பிக்கப்பட்ட செயலி  உதவும்.

இது தொடர்பாக MoHAP இன் பொது சுகாதார உதவி செயலாளரான டாக்டர் ஹுசைன் அல் ராண்ட் அவர்கள் பேசுகையில், அமீரக சுகாதாரத் துறையின் ஸ்மார்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் பயணத்தில் இந்த அப்கிரேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொற்று நோய்களுக்கு எதிரான மிகவும் திறமையான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ள அமீரக அரசாங்கம், மக்களுடன் பல்வேறு தகவல்தொடர்பு வழிகளை உருவாக்க ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது என்றும் அல் ராண்ட் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!