அமீரக செய்திகள்

வீடியோ: 178,000 வெடிபொருட்கள், 6,600 சூப்பர்லைட்டுகள்… உலகமே திரும்பி பார்க்கும் மிக பிரம்மாண்ட புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டம்…

புத்தாண்டு துவங்குவதற்கு ஒரு சில மணித்துளிகளே இருக்கின்ற நிலையில், அமீரகமெங்கும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

மேலும், ஒவ்வோர் ஆண்டும், துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டமானது உலகமே திரும்பி பார்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பொலிவுடன் நவீன முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளவில் கொரோனா அச்சம் இருந்தபோதிலும், துபாய் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறிதும் தளர்த்தாமல் அதே நேரத்தில் கொண்டாட்டத்திலும் எவ்வித குறையும் இல்லாமல் இரண்டையுமே சமன்படுத்தி பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விழாவை ஒருங்கிணைக்கும் மகத்தான முயற்சியை விளக்கும் ஒரு அற்புதமான வீடியோவை அமைப்பாளர்கள் Emaar தற்பொழுது பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து “இந்த இரவை உயிர்ப்பிக்க கடின உழைப்பாளிகள், அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமுள்ள மக்கள் அடங்கிய ஒரு முழு குழுவும் தேவை!” என்று கூறியுள்ளது.

இந்த மாபெரும் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 177,958 கிலோ வெடிகள் 10,400 முறை வெடிக்கும் வகையில் மற்றும் 1,235 வெடிக்கும் திசைகளுடன் ஒருங்கிணைந்து பயன்படுத்தப்படும். மேலும் 60 லேசர் ப்ரொஜெக்டர்கள் தவிர, 274 ஒளி சாதனங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

22,000 கேலன் தண்ணீர் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 6,600 சூப்பர்லைட்கள் மற்றும் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் சுத்திகரிப்பும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!