கொரோனாவின் தாக்கம் முடிவதற்குள்ளாக அடுத்த ஒரு வைரஸ்..!!! சீனாவில் ஒருவர் பலி..!!!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோன்றிய இடமான சீனாவில் தற்பொழுது கொரோனா வைரஸின் பாதிப்புகள் சமீப காலமாக குறைந்து வரும் பட்சத்தில், தற்பொழுது ஹண்டா எனும் வைரஸ் பாதிப்பால் சீனாவில் யுனான் மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..
சீனாவின் குளோபல் டைம்ஸின் சமீபத்திய ட்வீட்டில், “யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று ஒரு பேருந்தில் வேலைக்காக சாண்டோங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது இறந்துள்ளார். அவரது உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் ஹன்டா வைரஸால் அவர் பாதிக்கப்பட்டு உரிழந்தது தெரியவந்துள்ளது . இதனையொட்டி, அந்த பேருந்தில் பயணித்த 32 பேருக்கும் தற்பொழுது சோதனை செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவித்துள்ளது.
ஹண்டா வைரஸ் என்றால் என்ன?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention-CDC) படி, ஹான்டவைரஸ்கள் என்பது ஒரு வகையான வைரஸ் குடும்பமாகும், இவை முக்கியமாக எலி வகையை சேர்ந்த பிராணிகளின் மூலமாகப் பரவும் என்று கூறப்பட்டுள்ளது/. மேலும் அவை மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி ஹீமோராஜிக் காய்ச்சலை (hemorrhagic fever) ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் பரவும் முறை
இந்த நோய் காற்றின் மூலமாகவோ, மனிதர்களிடம் இருந்தோ பரவாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பிராணிகளின் கழிவு, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றின் மூலமே பரவும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றவர்களை கடித்தால் இந்த நோய் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மற்றவர்களுக்கு பரவும் என்றும் கூறப்படுகிறது.
அறிகுறிகள்
ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, தசை வலி, அத்துடன் தலைவலி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் வயிற்று பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் இருக்கும் . இதனை கவனிக்காமல் அலட்சியமாக விட்டால், அது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்து உயிரிழப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 38 % பேர் இறக்க நேரிடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.