அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் ஈத் அல் ஃபித்ர் தொழுகை எந்த நேரங்களில் நிகழ்த்தப்படும்..?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!!

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் துவங்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்றன. கடந்த இரு வருடங்களைப் போல் அல்லாமல் இந்த வருடம் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அமீரக அரசு குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

அதில் ஈத் அல் ஃபித்ர் தொழுகைக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பராமரித்தல், கூட்டமாக ஒன்று கூடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். இந்த நெறிமுறைகளை அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈத் அல் ஃபித்ர் என்று சொல்லக்கூடிய நோன்பு பெருநாள் தொழுகை அமீரகம் முழுவதும் எந்த நேரத்தில் நடத்தப்படும் என்ற விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு எமிரேட்டிலும் தொழுகை நடத்தப்படவிருக்கும் நேரங்கள்

  • துபாய் : அதிகாலை 5.59
  • அபுதாபி : அதிகாலை 6.03
  • அல் அய்ன் : அதிகாலை 5.57
  • ஷார்ஜா : அதிகாலை 5.58
  • ஃபுஜைரா : அதிகாலை 5.58
  • உம் அல் குவைன் : அதிகாலை 5.57
  • ராஸ் அல் கைமா : அதிகாலை 5.56
  • அஜ்மான்: அதிகாலை 5.58

Related Articles

Back to top button
error: Content is protected !!