அமீரக செய்திகள்

ஆப்பிள் iPhone, iPad பயனாளர்களுக்கு அபுதாபி டிஜிட்டல் ஆணையம் விடும் எச்சரிக்கை..!!!

அமீரகத்தில் உள்ள அபுதாபி டிஜிட்டல் ஆணையம் (Abu Dhabi Digital Authority) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐபோன் (iPhone) மற்றும் ஐபாட் (iPad) பயனாளிகள் அனைவரையும் தங்கள் சாதனங்களில் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஈமெயில் அப்ளிகேஷனை (Apple default Mail Application) உடனடியாக நீக்குமாறு எச்சரிக்கை செய்யும் செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது, “ஐபோன் மற்றும் ஐபாடில் பயன்படுத்தப்படும் ஈமெயில் அப்ளிகேஷனில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிக பாதிப்புகள் குறித்து கவனமாக இருங்கள். இது உங்களிடம் இருக்கக்கூடிய தகவல்களில் ஆபத்தை ஏற்படுத்தும். பாதுகாப்பாக இருங்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளது.

மேலும், இந்த பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் வரை இந்த ஈமெயில் அப்ளிகேஷனை உடனடியாக நீக்கவும், அதற்கு பதிலாக மற்ற ஈமெயில் அப்ப்ளிகேஷனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக்கர்கள் மற்ற நபர்களின் ஈமெயிலை அணுகவும், தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்பவும், இந்த மின்னஞ்சல்களைக் கிளிக் செய்பவர்களின் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் கூறுகையில் இந்த குறைபாடு பயனாளர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( Telecommunications Regulatory Authority,TRA) இந்த பயன்பாட்டை எவ்வாறு முடக்குவது மற்றும் பிற ஈமெயில் அப்ளிகேஷன்களை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது பற்றிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.


ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது பற்றி கூறியதாவது “வல்லுநர்கள் மெயிலில் மூன்று சிக்கல்களை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவை மட்டும் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களின் பாதுகாப்புகளைத் தவிர்க்க போதுமானதாக இருக்காது, மேலும் இந்த பாதுகாப்பு குறைபாட்டின் மூலம் வாடிக்கையாளர்களின் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஈமெயில் அப்ளிகேஷனில் உள்ள சிக்கல்கள் விரைவில் ஒரு மென்பொருள் புதுப்பிப்பில் (software update) தீர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!