அமீரக செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்..!! எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அமீரகத்தை மையமாகக் கொண்டு பொது நல சேவைகளில் ஈடுபட்டு வரும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (Emirates Red Crescent – ERC) மூலமாக வழங்கப்படும் என்று  அதன் பொதுச்செயலாளர் டாக்டர் முகமது அதீக் அல் ஃபலாஹி (Dr. Mohammed Ateeq Al Falahi) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த செயலானது அமீரக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள “நீங்கள் உங்கள் குடும்பங்களில் ஒருவராக இருக்கிறீர்கள் (You are among your Families)” என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவும் மற்றும் சமூக சேவை துறையில் மக்களை நேசிக்கும் தன்மையுடைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயல்களை மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முயற்சியானது எமிரேட்ஸ் ரெட் கிரெசென்ட்டின் தலைவரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸின் காரணமாக உயிரிழந்ததன் மூலம் தங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்து வாழும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்கும், அதன் எதிரொலியாக அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை தணிப்பதற்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய ERC ஆர்வமாக இருப்பதை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்தையும் ERC வழங்கும் என்றும், நேசிப்பவரை இழந்து வாட கூடிய குடும்பத்தினர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான முழு பங்களிப்பையும் வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் உள்ள திறமையான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை அடையாளம் காண்பது, அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது, அவர்களின் சமூக நிலைமைகளை பற்றி தெரிந்துகொள்வது மற்றும் அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அவர்களின் தேவைகளை அடையாளம் காண்பது போன்றவற்றின் மூலம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்வதற்குண்டான முயற்சிகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அல் ஃபலாஹி குறிப்பிட்டுள்ளார். .

மேலும் இந்த விஷயத்தில் ERC அதன் மனிதாபிமான நோக்கங்களை அடைவதற்குண்டான எந்த முயற்சியையும் கைவிடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 35 பேர் தங்களின் வாழ்வினை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!