அமீரக செய்திகள்
ஏப்ரல் 5 முதல் துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தம்..!! RTA அறிவிப்பு..!!
துபாயில் நாளை முதல் (ஏப்ரல் 5) மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள் முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று அறிவித்துள்ளது. துபாயில் மக்களுக்கான பொது போக்குவரத்தில் அதிக பங்களிப்பை வழங்கக்கூடியது துபாய் மெட்ரோ ஆகும். ஆனால் தற்போதய சூழ்நிலையில், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஒட்டி மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள் இரண்டையும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நாள் முழுவதுமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துபாய் நகர பேருந்துகள் அனைத்தும், RTA அறிவித்த புதிய அட்டவணையின்படி வழக்கம்போல் இயங்கும் என்று RTA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : Khaleej Times