அமீரக செய்திகள்
சாலை விதிமீறல்களுக்கு உண்டான அபராதத்தில் மூன்று வகையான தள்ளுபடியை அறிவித்த அபுதாபி காவல்துறை..!!
அபுதாபி காவல்துறை வியாழக்கிழமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாகன ஓட்டிகளுக்கு அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் மூன்று வகையான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
முதலாவதாக, ஜூன் 22 வரை வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இரண்டாவதாக, சாலை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் அபராதக் கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கு 35 சதவீத தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
விதிமீறலில் ஈடுபட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குப் பிறகு அபராதக் கட்டணம் செலுத்தினால் அபராதத்திலிருந்து 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.