அமீரக செய்திகள்

UAE : விமான பயணம் தொடர்பான கேள்விகளுக்கு Toll Free நம்பரை வெளியிட்ட இந்திய துணை தூதரகம்..!!

‘வந்தே பாரத்’ எனும் வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் திட்டம் நேற்று (மே 7) முதல் தொடங்கியதை அடுத்து, இந்தியா செல்ல விண்ணப்பித்தவர்களின் அவசர தேவையின் அடிப்படையில், இந்திய தூதரகங்களால் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதிவு செய்த அனைவரும் ஒவ்வொரு கட்டங்களாக தாயகம் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தின் முதல் நாளான நேற்று, அமீரத்தில் இருக்கக்கூடிய கேரளா மாநிலத்தவர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சார்ந்த இரண்டு விமானங்கள் இந்தியா புறப்பட்டு சென்றது. இதில் ஒன்று அபுதாபியிலிருந்தும், மற்றொரு விமானம் துபாயிலிருந்தும் புறப்பட்டு நேற்றிரவே கேரளாவை சென்றடைந்தது.

இந்த திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மேலும் இரண்டு விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு தமிழகம் செல்ல இருக்கிறது. இவ்வாறு பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்த வந்தே பாரத் திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்களிடையே எழுகின்றன. மேலும் இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்ட வலைத்தளத்தில் பதிவு செய்த பலரும், தங்களின் விமான பயணம் தொடர்பான அறிவிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், துபாயில் இருக்கக்கூடிய இந்திய துணைத்தூதரகம், வந்தே பாரத் திட்டம் தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களை கேட்டறிய 800-244-382 என்ற Toll Free நம்பரை வெளியிட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதால், புதிய அழைப்புகளை இணைப்பதற்கு சற்று நேரம் எடுக்கும் என்றும் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் இந்த Toll Free நம்பரின் மூலம் கேட்டு அதற்கான விளக்கங்களை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!