இந்திய செய்திகள்வளைகுடா செய்திகள்

மே 7 முதல் 13 வரையிலான விமான பயண திட்டம் வெளியீடு..!! தமிழகத்திற்கான முழு விபரம் உள்ளே..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையின் முதல் வாரத்திற்கான விரிவான விமான பயண திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் ஏழு நாட்களுக்கு இந்திய விமானங்கள் செல்லும் நாடுகளின் விபரங்களும், இந்தியாவிற்கு திருப்பி வந்தடையும் நகரங்களின் விபரங்களும் கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

முதல் நாள்

மே மாதம் 7ம் தேதி இந்தியாவில் இருந்து 10 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர்களை கேரளா, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துவர உள்ளது. முதல் நாளில் தமிழகத்திற்கான எந்த சிறப்பு விமானமும் இயக்கப்படமாட்டாது என அந்த அட்டவணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இரண்டாம் நாள்

மே மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை, வெளிநாடுகளுக்கு செல்லும் 9 விமானங்களில் இரண்டு விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டிலுள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

மூன்றாம் நாள்

வரும் 9ம் தேதி சனிக்கிழமை, இந்தியாவில் இருந்து செல்லும் 9 விமானங்களில் இரண்டு விமானங்கள் முறையே மலேசியாவிற்கு ஒன்று மற்றும் அமெரிக்காவிற்கு ஒன்று என இரு விமானங்கள் சென்று அங்குள்ள இந்தியர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும். மலேசிய விமானமானது திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கும், அமெரிக்காவிலிருந்து வரும் விமானம் மும்பை வழியாக சென்னை விமான நிலையத்திற்கும் வந்து சேரும்.

நான்காம் நாள்

இத்திட்டத்தின் நான்காம் நாளான வரும் 10 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவிலிருந்து செல்லும் 8 விமானங்களில் குவைத்திற்கு ஒரு விமானம் என்றும் சிங்கப்பூருக்கு ஒரு விமானம் என்றும் அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படும். குவைத்திற்கு செல்லும் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தையும் சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் திருச்சி விமான நிலையத்தையும் வந்தடையும்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாளான 11ம் தேதி திங்கள் கிழமை, இந்தியாவிலிருந்து 9 விமானங்கள் புறப்படும். அதில் மலேசியாவிற்கு செல்லும் ஒரு விமானம் அங்குள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடையும்.

ஆறாம் நாள்

ஆறாம் நாளான 12 ம் தேதி செவ்வாய்க்கிழமை, 11 விமானங்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும். அதில் ஓமான் நாட்டிற்கு ஒரு விமானமும் இங்கிலாந்து நாட்டிற்கு ஒரு விமானமும் சென்று அங்குள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரும்.

ஏழாம் நாள்

இத்திட்டத்தின் முதல் வாரத்தின் இறுதி நாளான 12 ம் தேதி, 8 விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்படும். அவற்றில் பங்களாதேஷ் நாட்டிற்கு ஒரு விமானம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஒரு விமானம் என சென்று அங்குள்ளவர்களை அழைத்து கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

முதல் வாரத்தில் தமிழகத்திற்கு இந்தியர்களை அழைத்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் நாடுகளின் விபரம்:

ஐக்கிய அரபு அமீரகம் – 2 விமானங்கள்
மலேசியா – 2 விமானங்கள்
அமெரிக்கா – 1 விமானம்
குவைத் – 1 விமானம்
சிங்கப்பூர் – 1 விமானம்
ஓமான் – 1 விமானம்
இங்கிலாந்து – 1 விமானம்
பங்களாதேஷ் – 1 விமானம்
பிலிப்பைன்ஸ் – 1 விமானம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!