KSA : சென்னை உட்பட சில நகரங்களுக்கு சிறப்பு விமானம் இயக்க Gulf Air திட்டம்..!! இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை..!!
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான நிறுவனமான கல்ஃப் ஏர் (Gulf Air), சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் சில நகரங்களுக்கு சிறப்பு விமானம் இயக்குவது தொடர்பாக, சவூதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு விமானங்கள், தற்போதய சூழ்நிலைகளின் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் என்றும் இந்த விமானங்கள் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரிலிருந்து இந்தியாவின் சென்னை, கொச்சின், மங்களூர், அஹமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்புகளினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், உலகளவில் இன்றும் இயங்கி வரும் ஒரு சில விமான நிறுவனங்களில் ஒன்றான கல்ஃப் ஏர் விமானம், குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் திட்டமிடப்படாத சிறப்பு விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.