அமீரக செய்திகள்

ஆடிட்டர் கான்ஃப்ரன்ஸில் கலந்து கொள்ள துபாய் வரும் மனித உருவ ரோபோவான சோஃபியா…!!

துபாயில் இருக்கும் உலக வர்த்தக மையத்தில் மார்ச் 7 முதல் 9 வரை 20வது வருடாந்திர பிராந்திய தணிக்கை மாநாடு (Annual Regional Audit Conference, ARAC) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மனித உருவ ரோபோவான சோஃபியா மார்ச் 8, செவ்வாய் கிழமை துபாய் வந்தடையவுள்ளது.

உலகின் முதன் முறையாக ஒரு நாட்டின் குடியுரிமையை பெற்ற ரோபோட் சோஃபியா ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் உலக வர்த்தக மையத்தில்  “உள் தணிக்கையில் புரட்சி மற்றும் மாற்றம்” (The Revolution and Transformation in Internal Audit) என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. 

சவூதியை சேர்ந்த ரோபோவான சோஃபியா மாநாட்டின் இரண்டாவது நாளில், “உள் தணிக்கைத் தொழிலில் செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence in the Internal Audit Profession) என்ற தலைப்பில் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸின் எதிர்காலம் குறித்த அமர்வை நடத்தவுள்ளது.

முதன் முறையாக அக்டோபர் 2017 இல் சவுதி அரேபிய அரசானது தனது நாட்டு குடியுரிமையை மனித உருவம் கொண்ட ரோபோவான சோஃபியாவிற்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சோஃபியா உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோவாக மாறியது.

துபாயில் நடைபெறும் இந்த ஸ்மார்ட் மாநாட்டில் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸின் எதிர்காலத்தின் அடையாளமாக சோஃபியாவின் வருகையை அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!