அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அமீரகத்தில் எங்கெல்லாம் வான வேடிக்கை நிகழ்த்தப்படும்..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாட்டம் என்று சொன்னாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வானவேடிக்கை நிகழ்வுகள்தான். அப்படியிருக்க வரும் ஈத் அல் ஃபித்ரின் போது வான வேடிக்கை நிகழ்த்தப்படும் என நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இருந்த போதிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அமீரகத்தில் எங்கெல்லாம் நிகழும் என்பது குறித்த தகவல்கள் பிரத்யேகமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தி பாயிண்ட்

துபாயில் உள்ள பாம் ஐலேண்டில் உள்ள தி பாயிண்ட்டில் (the pointe), ஈத் அல் பித்ரின் முதல் நாளில் இரவு 9 மணிக்கு வான வேடிக்கை நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூவாட்டர்ஸ் ஐலேண்ட்

உலகின் மிகப்பெரிய ஃபெர்ரி வீலைக் (ferry wheel) கொண்டிருக்கும், புளூவாட்டர்ஸ் ஐலேண்டானது துபாய் மெரினாவில் அமைந்துள்ளது. ஈத் அல் பித்ரின் இரண்டாவது நாளில் இரவு 9 மணிக்கு இங்கு வான வேடிக்கை நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்

துபாய் க்ரீக்கிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் பாரம்பரியமாக பெரும்பாலான முக்கிய கொண்டாட்டங்களுக்கு வான வேடிக்கை நிகழ்ச்சியைக் கொண்டிருக்கும். அதே போல வரும் ஈத் அல் ஃபித்ரின் இரண்டாவது நாளில் இரவு 9 மணிக்கு பிரத்யேக வான வேடிக்கை நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

யாஸ் ஐலேண்ட்

ஈத் அல் ஃபித்ரின் முதல் மூன்று நாட்களில் இரவு 9 மணிக்கு பார்வையாளர்கள் மகிழும் வகையில் அபுதாபியில் இருக்கக்கூடிய யாஸ் ஐலேண்டில் வானவேடிக்கைகளுடன் வானத்தை ஒளிரச் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குளோபல் வில்லேஜ்

ஏப்ரல் 30 முதல் உற்சாகமான நிகழ்ச்சிகள், தினசரி வானவேடிக்கைகள் ஆகியவற்றுடன் விடுமுறையை சிறப்பாக கொண்டாடுவதற்கான வாய்ப்பை இது விருந்தினர்களுக்கு வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் குளோபல் வில்லேஜ் ஏப்ரல் 30 முதல் விடுமுறை நாட்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் நேரத்தையும் நீட்டித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!