அமீரக செய்திகள்

துபாய்: போலி ஆவணம் மூலம் மகனின் விசாவை புதுப்பித்த நபருக்கு சிறைதண்டனை.. தண்டனை முடிந்ததும் நாடு கடத்த உத்தரவு…!!

அமீரகத்தில் 45 வயதான ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மகனின் விசாவை புதுப்பிப்பதற்கான குத்தகை ஒப்பந்தத்தின் (lease contract) நகல்களை போலியாக தயாரித்ததற்காக துபாய் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

காவல்துறை மற்றும் பொது வழக்கு விசாரணைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அதற்கு பதிலாக தனது மகனின் ரெசிடென்ஸ் விசாவை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்க ஒரு நபரை நியமித்ததாக வாதிட்டுள்ளார்.

மேலும் அவர் அந்த நபருக்கு தனது மகனின் அசல் பாஸ்போர்ட், அவரது அடையாள அட்டையின் புகைப்பட நகல் மற்றும் பிற ஆவணங்களுடன் 600 திர்ஹம் தொகையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலி ஒப்பந்தப் பதிவு ஆவணத்தின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அது போலியானது என்பது தனக்குத் தெரியாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் கூறியிருக்கிறார்.

விசா விண்ணப்ப செயல்முறை குறித்து கருத்து தெரிவித்த அவர், குடியிருப்பு விசாவை புதுப்பிக்க தேவையான ஆவணங்களில் வாடகை ஒப்பந்தமும் ஒன்று என்பது தனக்கு தெரியும் என்றும், போலி ஒப்பந்தத்தில் (அஜ்மான்) என குறிப்பிட்டிருந்த நிலைக்கு மாறாக அவர் ஷார்ஜாவில் வசிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அஜ்மானில் உள்ள அரசாங்கத் துறை சம்பந்தமான ஒரு போலி ஒப்பந்தம் தான் நியமித்த நபரால் ஏன் சமர்ப்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் தனது நலனுக்காக, அவருக்குத் தேவையான தரவுகளை தெரியாத நபருக்கு வழங்கி பின்னர் அந்த நபர் ஒரு குற்றத்தைச் செய்தது தனக்கு தெரியாது என கூறுவது நியாயமற்றது என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, போலி ஒப்பந்த நகல் குறித்து அவருக்கு முழுமையாகத் தெரியும் என்றும், தற்போது அதை மறுப்பதாகவும் நீதிமன்றம் கூறி அவருக்கு சிறைதண்டனை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் சிறை தண்டனை பெற்ற பிறகு நாடு கடத்தப்படுவார் என உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!