UAE கொரோனா அப்டேட் (ஜூலை 15, 2020) : பாதிக்கப்பட்டோர் 275 பேர்..!! குணமடைந்தோர் 339 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஜூலை 15, 2020) புதிதாக 275 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 55,848 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு அமீரகத்தில் கொரோனாவிற்கு இன்று யாரும் பலியாகவில்லை. இது குறித்து அபுதாபியின் மகுட இளவரசர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொடர்பான இறப்புகள் எதுவும் இன்று நாங்கள் அறிவிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், கொரோனாவிற்கு எதிராக முன்னின்று போராடும் அனைத்து ஹீரோக்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்ததுடன் குடியிருப்பாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்காக பாராட்டியும் அவர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 335 ஆக இருக்கிறது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 393 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 46,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.