துபாய், புஜைரா, ராஸ் அல் கைமாவிலும் 50 திர்ஹம்ஸ் கட்டணத்திலான DPI லேசர் மையங்களை திறந்த SEHA..!!
![](https://www.khaleejtamil.com/wp-content/uploads/2020/08/AR-200808622.jpg)
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான எதிர்மறை முடிவுகள் வைத்திருக்க வேண்டும் என அபுதாபி சுகாதார துறை அறிவித்ததை தொடர்ந்து, அபுதாபி மற்றும் துபாய் எல்லை பகுதியில் 50 திர்ஹம்ஸ் கட்டணத்தில் லேசர் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மையம் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் நான்கு புதிய மையங்கள் அபுதாபி சுகாதாரத்துறை சார்பாக அபுதாபி சிட்டி மற்றும் அல் அய்ன் பகுதியில் அபுதாபி குடிமக்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அபுதாபியை தொடர்ந்து தற்போது 50 திர்ஹம்ஸ் கட்டணத்தில் லேசர் முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளும் மேலும் நான்கு புதிய மையங்கள் துபாய், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மையங்கள் துபாயின் ரஷீத் துறைமுகம் மற்றும் அல் கவானீஜ் பகுதியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மையங்களில் ஐந்து நிமிடங்களுக்குள் முடிவுகளைத் தரும் டிபிஐ லேசர் (DPI Lesar) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
DPI லேசர் முறையிலான இந்த பரிசோதனை மேற்கொள்ள விரும்புபவர்கள் SEHA மொபைல் அப்ளிகேஷன் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனையில் எதிர்மறையான முடிவுகளை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே சோதனை முடிவுகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal