அமீரக செய்திகள்

UAE: “பேய்களின் நகரம்” என சொல்லப்படும் ராஸ் அல் கைமாவின் பழமையான இடம்..!! உண்மை நிலவரம் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வரலாற்றைக் கொண்ட எமிரேட் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பழமையான சில நகரங்களை இங்கு நாம் காணலாம்.

அவற்றில் ஒன்று 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைவிடப்பட்ட கடைசி மீனவர்களின் கிராமமான ஜசீரத் அல் ஹம்ரா.


இந்த கிராமம் தற்பொழுது “பேய் நகரம்” என சில மக்களால் நம்பப்படுகிறது.

இந்த கிராமம் குறித்து பல்வேறு கதைகள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் உலா வருகின்றன.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்கிறார் ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராக்கி பிலிப்ஸ்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஜசீரா அல் ஹம்ரா தற்பொழுது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு தற்காலிக யுனெஸ்கோ பாரம்பரிய தளமாகும். நாங்கள் அதை முழுமையாக மீட்டெடுத்துள்ளோம்” என்று பிலிப்ஸ் கூறியுள்ளார்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தி வந்த வழியை தற்பொழுது பார்வையாளர்களும் பயன்படுத்தி இந்த கிராமத்தைக் கண்டு களிக்கலாம்.

அதே போல், அங்கு மக்கள் வாழ்ந்த வீடுகளுக்குள்ளும் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், அங்கிருக்கும் சாகச அம்சங்களையும் பார்வையாளர்கள் தவறவிடக்கூடாது.

அதில் முக்கியமான ஒன்று ஒன்பது ப்ளாட்ஃபார்ம்களில் ஏழு ஜிப்லைன்களைக் (ziplines) கொண்ட ஜெபல் ஜெய்ஸ் ஸ்கை சுற்றுப்பயணம் என்று பிலிப்ஸ் கூறியுள்ளார். “ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்த சாகச பயணத்தில் நம்பமுடியாத அனுபவத்தைப் பெறலாம் மற்றும் அங்குள்ள மலைகளை கழுகுப் பார்வையில் கண்டு களிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அல் சுவைதி (al suwaidi) முத்து பண்ணைக்கும் சென்று அங்கு சிப்பிகளை எவ்வாறு முத்தில் இருந்து பிரித்தெடுப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் RAK- வில் துவங்கப்படவிருக்கும் பல இடங்களையும் RAK சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் வாதி பாதையில் (wadi track) இருந்து ஜெய்ஸ் வரை பாராகிளைடிங், ஜெபல் ஜெய்ஸின் அடிவாரத்தில் ஒரு தனித்துவமான உணவு மற்றும் பான நிலையங்கள், அத்துடன் சுற்றுச்சூழலைச் சார்ந்த ஹோட்டல், மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் லாட்ஜ்கள், முகாம்கள் மற்றும் பிற பிரத்யேக இடங்கள் ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிலிப்ஸ் கூறுகையில், ராஸ் அல் கைமா மட்டுமே உயர்ந்த மலை, கடற்கரை, பாலைவனம் ஆகிய மூன்று இயற்கை வளங்களைக் கொண்ட ஒரே எமிரேட். இந்த இயற்கை வளங்களை நாங்கள் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த விரும்புகிறோம்” என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!