அமீரக செய்திகள்

துபாய், ஷார்ஜா இடையேயான இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் மீண்டும் துவக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு இடையேயான இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் இன்று (செப்டம்பர் 27) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்கள் வழியே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், மூன்றாவது பாதையில் இரு வாரங்கள் கழித்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மூன்று வழித்தடங்களில் முதலாவது, E303, துபாயில் உள்ள யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து (Union Metro Station) தொடங்கி ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பேருந்து நிலையத்திற்கு (Al Jubail Bus Station) செல்கிறது. இரண்டாவது பாதையானது, E307A, துபாயில் உள்ள அபு ஹெயில் மெட்ரோ நிலையத்திலிருந்து (Abu Hail Metro Station) தொடங்கி அல் ஜுபைல் பேருந்து நிலையத்திற்கு (Al Jubail Bus Station) செல்கிறது. இன்று (செப்டம்பர் 27) முதல் இந்த இரண்டு வழித்தடங்களும் செயல்படத் தொடங்குகின்றன. துபாயில் உள்ள எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து (Etisalat Metro Station) தொடங்கி முவைலே பேருந்து நிலையத்திற்குச் (Muwaileh Bus Station) செல்லும் மூன்றாவது வழித்தடத்தில் E 315, இரு வாரங்களுக்குப் பிறகு பேருந்து சேவைகள் இயக்கப்படும்” என்று RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனம், திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் சர்கிரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த மூன்று வழிகள் மிக முக்கியமானவை. இந்த பேருந்து சேவைகளானது துபாய், ஷார்ஜாவில் இருக்கும் பயணிகளுக்கு குறிப்பாக ஷார்ஜாவில் வசித்துக் கொண்டு துபாயில் பணிபுரியும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!