அமீரக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக புதிய கள மருத்துவமனை ஷார்ஜாவில் திறப்பு..!!

ஷார்ஜாவில் கொரோனா நோயாளிகளுக்கான புதிய கள மருத்துவமனையானது தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா ஆட்சியாளரின் அலுவலகத் தலைவரான ஷேக் சேலம் பின் அப்துல்ரஹ்மான் அல் காசிமி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை முகமது பின் சையத் கள மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையானது 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் 204 படுக்கைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 48 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அவற்றில் 156 படுக்கைகள் கொரோனாவினால் மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோயாளிகளுக்கு சிறந்த தரமான பராமரிப்பை வழங்க மருத்துவமனையில் 75 மருத்துவர்கள், 231 செவிலியர்கள் மற்றும் 44 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை பணியாளர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு கோவிட் கள மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது, இந்த மாத தொடக்கத்தில் அஜ்மானில் ஒரு கள மருத்துவமனை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனைகளில் மொத்தம் 2,058 படுக்கைகள் இருக்கும் என்றும், அவற்றில் 292 படுக்கைகள் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்படும் இந்த மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கும் என்று அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!